Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 5)

அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்

ஸ்ரீமந்நாராயணனே பலன்

மூலம் – இப்படி ஸ்வேச்சாஸித்தமான ஆநுகூல்யத்தை உடைத்தான தன் ப்ரகாரங்கள் எல்லாவற்றோடும் கூடின ஸ்ரீமானான நாராயணன் ப்ராப்யனென்னுமிடம் திருமந்த்ரத்திலும் த்வயத்திலும் சதுர்த்யந்த பதங்களிலே அபிப்ரேதம்.

– இப்படியாக அனைத்தும் அவனை அண்டி நிற்பது என்பதே அவனுடைய ஸங்கல்பத்தால் மட்டுமே கைகூடும் என்னும்படியாக உள்ளவனும், மஹாலக்ஷ்மியுடன் கூடியபடி உள்ளவனும் ஆகிய ஸ்ரீமந்நாராயணனே அடையப்படும் இலக்காகவும் பலனாகவும் உள்ளான். இதனை திருமந்த்ரத்திலும், த்வயத்திலும் உள்ள நான்காம் வேற்றுமை மூலம் மறைமுகமாக அறியலாம்.