Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 22.பரிபூர்ண ப்ரஹ்ம அநுபவ அதிகாரம்
மூலம்– விதமஸி பதே லக்ஷ்மீகாந்தம் விசித்ர விபூதிகம் ஸசிவ கமித: ஸம்பத்ய ஆவிர்பவத் ஸஹஜ ஆக்ருதி: ஸ்புட தத் அப்ருதக்ஸித்தி: ஸித்யத் குணாஷ்டக தத்பலோ பஜதி பரமம் ஸாம்யம் போகே நிவ்ருத்தி கதா உஜ்ஞிதம்
– இந்த ப்ரக்ருதிக்கு அப்பால் உள்ள ஸ்ரீவைகுண்டத்தில், வியக்கவைக்கும் விபூதிகளைக் கொண்டவனாகிய மக்ஷாலக்ஷ்மியின் நாயகனான ஸ்ரீமந்நாராயணன் உள்ளான். அவனை ஆதிவாஹிகர்களால் ப்ரபந்நன் அடைகிறான். அப்போது அவனது ஸ்வபாவமாக உள்ள தன்மைகள் வெளிப்படுகின்றன. தான் எம்பெருமானை விட்டு அகலக்கூடாது என்று அறிகிறான். பாவங்கள் அற்ற தன்மை உள்ளிட்ட எட்டு குணங்கள் மற்றும் அவற்றின் பலன்கள் ஆகியவை மீண்டும் கிட்டப்பெறுகிறான். மீண்டும் அங்கிருந்த திரும்புதல் என்ற நிலையே உண்டாகாமல், எம்பெருமானை ஒத்த அனுபவங்களை அடைகிறான்.