Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 11)
அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்
பித்ருபத கடீயந்த்ர ஆரோஹ அவரோஹ பரிந்பமை: நிரயபதவீ யாதாயாத க்ரமைச்ச நிரந்தரை: அதிகத பரிச்ராந்தீந் ஆஜ்ஞாதரை: அதிவாஹ்ய ந: ஸுகயதி நிஜச்சாயாதாயீ ஸ்வயம் ஹரிசந்தந:
– நீர் ஏற்றத்தில் கட்டப்பட்ட பானை ஒன்று எவ்விதம் மேலே ஏறியபடியும், கீழே இறங்கியபடியும் இருக்குமோ அது போன்று நாமும் பித்ருக்களின் வழியே இறங்குதல் மற்றும் ஸ்வர்க்கம் புக ஏறுதல் போன்றவற்றைச் செய்தபடியே உள்ளோம். இப்படியாக நரக மார்க்கத்தில் போவதும், வருவதும் ஆகிய செயல்கள் மூலம் நாம் களைத்துப் போகிறோம். இப்படியாக உள்ள நம்மை ஆதிவாஹிகர்கள் மூலம் நல்வழியில் கொண்டு சென்று, எம்பெருமான் என்னும் சந்தன மரம் தானாகவே தனது நிழலை அளித்து, இன்பம் அளிக்கும்படிச் செய்கிறான்.