Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 10)
அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்
நடைபெறவங்கிப் பகலொளிநாள் உத்தராயணமாண்டு இடைவரு காற்றிரவி இரவின்பதி மின் வருணன் குடையுடை வானவர்கோன் பிரசாபதி என்றிவரால் இடையிடை போகங்களெய்தி எழிற்பதம் ஏறுவரே
– இப்படியாக பரமபதம் செல்கின்ற ஜீவன் ஸூக்ஷ்ம சரீரத்துடன் நடந்து செல்லும்போது அக்னி, பகல்பொழுதின் தேவதை, சுக்லபக்ஷத்தின் தேவதை, உத்தராயணத்தின் தேவதை, வருடத்தின் தேவதை, வருடம் மற்றும் சூரியன் ஆகியவர்களின் இடையில் உள்ள வாயு, சூரியன், இரவின் தலைவனாகிய சந்த்ரன், மின்னலின் தேவதை, வருணன், வெண்கொற்றக்குடை கொண்ட தேவர்களின் அதிபதியாகிய இந்த்ரன், ப்ரஜாபதி ஆகியவர்களால் வழிகாட்டியபடி செல்கிறான். அப்பாதையின் நடுவில் பலவிதமான இன்பங்களை அனுபவித்தபடி அழகான பரமபதம் செல்வர்.