Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 9)

அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்

கத்ய (கதி) அநுஸந்தானத்துக்கு உதாரணம்

மூலம் – ஸமீபம் ராஜஸிம்ஹஸ்ய ராமஸ்ய விதிதாத்மந: ஸங்கல்பஹய ஸம்யுக்தைர்யாந்தீமிவ மநோரதை: என்னும்படி பிராட்டி இருந்த இருப்பு இவனுடைய கத்யநுஸந்தாநத்துக்கு நிதர்சநம்.

– இராமாயணம் (5-19-7) - ஸமீபம் ராஜஸிம்ஹஸ்ய ராமஸ்ய விதிதாத்மந: ஸங்கல்பஹய ஸம்யுக்தைர்யாந்தீமிவ மநோரதை: - தன்னுடைய கடமையை அறிந்தவனும், அரசர்களில் உயர்ந்தவனும் ஆகிய இராமனின் அருகாமையை அடையும்விதமாகத் தனது சிந்தனை என்னும் தேரை, இராமனைக் காணவேண்டும் என்ற ஆசை என்னும் குதிரைகள் மூலமாக சீதை இழுத்துச் சென்றாள் – என்பதற்கு ஏற்ப சீதை எவ்விதம் இராமனை அடையும் கதியை எண்ணியபடி இருந்தாளோ, அது போன்று ப்ரபந்நனும் இருத்தல்வேண்டும்.