Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 7)
அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்
சிலர் செல்லும் மார்க்கத்தின் விசேஷங்களை அவரவர்களே அறியவேண்டுதல்
மூலம்– ஸ்வவாதி பத ப்ராப்தி பூர்வக மோக்ஷஸாதனமான மதுவித்யாதிகளிலும், ஸத்த்வம் வஹதி சுத்தாத்மா தேவம் நாராயணம் ஹரிம் ப்ரபுர்வஹதி சுத்தாத்மா பரமாத்மாநமாத்மநா யேது தக்தேந்தநா லோகே புண்ய பாப விவர்ஜிதா: தேஷாம் வை க்ஷேமமத்வாநம் கச்சதாம் த்விஜஸத்தம ஸர்வலோகே தமோஹந்தா ஆதித்யோ த்வாரமுச்யதே ஜ்வாலா மாலீ மஹாதேஜா யேநேதம் தார்யதே ஜகத் ஆதித்ய தக்த ஸர்வாங்கா அத்ருச்யா: கேநசித் க்வசித் பரமாண்வாத்மபூதாச்ச தம் தேவம் ப்ரவிசந்த்யுத தஸ்மாதபி விநிர்முக்தா அநிருத்த தநௌ ஸ்திதா: மநோபூதாஸ்ததோ பூய: ப்ரத்யும்நம் ப்ரவிசந்த்யுத ப்ரத்யும்நாச்ச விநிர்முக்தா ஜீவம் ஸங்கர்ஷணம் தத: விசந்தி விப்ரப்ரவரா: ஸாங்க்ய்யோகாச்ச தை: ஸஹ ததஸ்த்ரைகுண்ய ஹீநாஸ்தே பரமாத்மாநமஞ்ஜஸா ப்ரவிசந்தி த்விஜச்ரேஷ்டா: க்ஷேத்ரஜ்ஞம் நிர்குணாத்மகம் ஸர்வாவாஸம் வாஸுதேவம் க்ஷேத்ரஜ்ஞம் வித்தி தந்வத: ஸமாஹித மநஸ்காஸ்து நியதா: ஸம்யதேந்த்ரியா: ஏகாந்தபாவோபகதா வாஸுதேவம் விசந்தி தே இத்யாதிகளான மஹாபாரதாதி வசநங்களிலும், ச்வேத த்வீபமித: ப்ராப்ய விச்வரூபதரம் ஹரிம் தத: அநிருத்தமாஸாத்ய ஸ்ரீமத்க்ஷீரோததௌ ஹரிம் தத: ப்ரத்யும்நமாஸாத்ய தேவம் ஸர்வேச்வரேச்வரம் தத: ஸங்கர்ஷணம் திவ்யம் பகவந்தம் ஸநாதநம் அயமப்யபரோ மார்க்க: ஸதா ப்ரஹ்மஸுகைஷிணாம் பரமைகாந்தி ஸித்தாநாம் பஞ்சகால ரதாத்மநாம் என்று இப்புடைகளிலே ஜயத் ஸம்ஹிதாதிகளிலும், விபவார்ச்சநாத்வ்யூஹம் ப்ராப்ய வ்யூஹார்ச்சநாத் பரம் ப்ரஹ்ம வாஸுதேவாக்யம் ஸூக்ஷ்மம் ப்ராப்யத இதி வதந்தி என்று ஸ்ரீபாஞ்சராத்ராதிகரணத்திலும் சில அதிகாரி விசேஷங்களைப் பற்றச் சொல்லுகிற க்ரமமுக்தி பக்ஷத்திலும், ஸத்யலோகாதிகளிலிருந்து முக்தராமவர்களுக்குமுள்ள கதிவிசேஷாதிகளிருக்கும் கட்டளைகள் அவ்வோ அதிகாரிகளுக்கே ஜ்ஞாதவ்யங்களாகையால் இங்கு அவை வகுத்துச் சொல்லுகை அபேக்ஷிதமன்று.
– மோக்ஷஸாதநமான மதுவித்யை போன்றவற்றிலும், கீழே உள்ள பல வரிகளிலும் முக்தர்களுக்கு வேறு மார்க்கம் உள்ளது என்று கூறப்பட்டதைக் காண்க: மஹாபாரதம் சாந்திபர்வம் (307-77) - ஸத்த்வம் வஹதி சுத்தாத்மா தேவம் நாராயணம் ஹரிம் ப்ரபுர்வஹதி சுத்தாத்மா பரமாத்மாநமாத்மநா – தூய்மையான ஸ்வரூபம் கொண்டதான ஸத்வகுணம் என்பது அநிருத்தனாக ரூபம் கொண்ட நாராயணனை அடையும்படிச் செய்கிறது. தூய்மையான ஸ்வரூபம் கொண்ட அநிருத்தனாகிய எம்பெருமான், தானே பரவாஸுதேவனிடம் இட்டுச் செல்கிறான். மஹாபாரதம் சாந்திபர்வம் (254 – 18 முதல் 20) – அந்தணர்களில் சிறந்தவரே! இந்த உலகில் ஸம்ஸாரம் என்னும் அக்னிக்கு, கர்மங்கள் என்பவை விறகுகளாக உள்ளன. இத்தகைய கர்மங்கள் கழிந்தவர்களாக, உலகில் புண்ணியபாவங்கள் நீங்கப் பெற்றவர்களாக, தங்களுக்கு நன்மையை அளிக்கவல்ல விஷ்ணுலோகம் செல்பவர்களுக்கு, அனைத்து உலகின் இருளை நீக்குபவனும் நிறைந்த கதிர்களுடன் மிகுந்த ஒளியைக் கொண்டவனும் ஆகிய சூரியன், அவர்கள் செல்லும் துவாரமாகவே கூறப்படுகிறான். இந்த உலகம் அவனால் தரிக்கப்படுகிறது. அந்த துவாரத்தின் வழியே செல்லுபவர்கள், சூரியனால் தங்களது சரீரம் முழுவதும் எரிக்கப்படுகின்றனர். அதன் பின்னர் யாருடைய பார்வைக்கும் புலப்படாதவர்களாக, பரமாணு அளவே இருக்கின்ற ஆத்மஸ்வரூபத்துடன் அநிருத்தனிடம் செல்கின்றனர். அநிருத்தனிடமிருந்து மீண்டு, தங்களது மனம் மட்டும் கொண்டவர்களாக ப்ரத்யும்நனிடம் செல்கின்றனர். ப்ரத்யும்நனிடமிருந்து மீண்டு, ஜீவனின் அபிமான தேவதையான ஸங்கர்ஷணனிடம் புகுகின்றனர். இவர்களுடன் ஞானயோகம் கைக்கொள்பவர்களும் ஸங்கர்ஷணனிடம் சேர்கின்றனர். அதன் பின்ன்னர் தங்களது மூன்று குணங்களையும் கைவிட்டவர்களாக, அந்தர்யாமியாகவும் தாழ்வான குணங்கள் அற்றவனும் ஆகிய பரமாத்மாவை அடைகின்றனர். அந்தப் பரமாத்மாவே அனைத்து வஸ்துக்களின் இருப்பிடமான வாஸுதேவன் என்று மன அமைதி கொள்கின்றனர். தங்கள் இந்த்ரியங்களை வசப்படுத்தியவர்களாக, ஒருவனிடம் மட்டுமே தங்கள் மனதை நிலைநிறுத்தியவர்களாக அவர்கள் வாஸுதேவனை அடைகின்றனர். ஜயத் ஸம்ஹிதை – இந்த உலகிலிருந்து ச்வேத த்வீபம் சென்று, அனைத்தையும் தனது சரீரமாகக் கொண்ட எம்பெருமானை அடைகின்றனர். பின்னர் திருப்பாற்கடலில் உள்ள அநிருத்தனை அடைகின்றனர். அங்கிருந்து புறப்பட்டு அனைத்து தேவர்களுக்கும் ஈச்வரனாகிய ப்ரத்யும்நனை அடைகின்றனர். அதன் பின்னர் ஸங்கர்ஷணனை சேர்கின்றனர். எப்போதும் ப்ரஹ்மத்திற்கு ஒத்த ஆனந்தம் இருக்கவேண்டும் என்று எண்ணியவர்களாக, பரமைகாந்திகளாக, ஐந்துவேளையிலும் கைங்கர்யங்கள் செய்து உன்னத நிலை அடைந்தவர்களுக்கு இந்த மார்க்கமும் உள்ளது. ஸ்ரீபாஷ்யம் ஸ்ரீபாஞ்சராத்ராதிகரணத்தில் (2-2-41) - விபவார்ச்சநாத்வ்யூஹம் ப்ராப்ய வ்யூஹார்ச்சநாத் பரம் ப்ரஹ்ம வாஸுதேவாக்யம் ஸூக்ஷ்மம் ப்ராப்யத இதி வதந்தி – எம்பெருமானின் ஸ்வரூபத்தை எப்போதும் ஆராதனை செய்தபடி உள்ளதால், வ்யூஹங்களை அடைந்து, அவற்றை ஆராதனை செய்து, பரப்ரஹ்மமாகிய வாஸுதேவனை அடைகின்றனர். இவை அனைத்தும் முக்தியை அடைகின்ற குறிப்பிட்ட பிரிவினர்களைச் (அதாவது குறிப்பிட்டவர்கள் மட்டுமே இப்படிப்பட்ட ப்ரத்யேகமான வழிகளில் முக்தி பெறுகின்றனர்) சொல்லுகிறது. இது போன்று ஒரு சிலர் ப்ரஹ்மனின் இருப்பிடமான ஸத்யலோகத்தில் சிலகாலம் இருந்த பின்னர் முக்தி அடைகின்றனர். இது க்ரமமாக முக்தி பெறுபவர்களுக்கும் (குறிப்பிட்ட வரிசையில் பெறுவது) கூறப்படுகிறது. இப்படியாக பலவிதமான அதிகாரிகளுக்கு அவர்களுக்கு ஏற்றபடி முக்தி மார்க்கம் வெவ்வேறாக உள்ளதால், அவை அனைத்தையும் விவரித்து இங்கு நாம் கூறவில்லை.