Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 2)
அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்
சரீரத்தை விட்டு ஜீவனை எடுத்துக் கொண்டு புறப்படுதல்
மூலம் – இப்படி மூர்த்தந்ய நாடியிலே ப்ரவேசிதனான முமுக்ஷுவை ஸ்தூல சரீரமாகிற ப்ரஹ்மபுரத்தினின்றும் ப்ரஹ்ம நாடியாகிற தலைவாசலாலே வத்ஸலனான ஹார்த்தன், வார்த்தை சொல்லக் கற்கிற முகவச்யனான ராஜகுமாரனை ராஜா எடுத்துக் கொண்டு உலாவுமாப்போலே கொண்டு புறப்பட்டு.
– இப்படியாக மூர்த்தந்ய நாடியில் நுழைகின்ற முமுக்ஷுவின் ஜீவனை, ப்ரஹ்மபுரி என்று கூறப்படுகின்ற ஸ்தூல உடலில் இருந்து, ப்ரஹ்மநாடி எனப்படும் தலை முடிய உள்ள நாடி வழியாக, அந்த ஜீவனின் இதயத்தில் வசிக்கின்ற அன்பு நிறைந்த எம்பெருமான் எடுக்கிறான். மழலை முற்றாத சொற்கள் கொண்ட கைக்குழந்தையான அரசகுமாரனைத் தனது தோள்களில் வைத்தபடி, மிகுந்த மகிழ்வுடன் அங்குமிங்கும் உலவுகின்ற அரசன் போன்று ஜீவனை எம்பெருமானை வைத்துக் கொண்டு புறப்படுகிறான்.