Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம் (பத்தி 1)

அர்த்தாநுசாஸந பாகம் – 21.கதிவிசேஷ அதிகாரம்

ஜ்வலந விதஸ ஜ்யோத்ஸ்நாபக்ஷ உத்தராயண வத்ஸராந் பவந தபந ப்ராலேயாம்சூந் க்ரமாதசிரத்யுதிம் ஜலதரபதிம் தேவாதீசம் ப்ரஜாபதிமாகத: தரதி விரஜாம் தூரே வாசஸ்தத: பரமத்புதம்

– அக்னி, பகல்பொழுதின் தேவதை (ஒருநாளின் தேவதை), சுக்லபக்ஷத்தின் தேவதை (பதினைந்து நாட்களின் தேவதை), உத்தராயணத்தின் தேவதை (ஆறு மதங்களின் தேவதை), ஸம்வத்ஸரத்தின் தேவதை (ஒரு வருடத்தின் தேவதை) ஆகியோர்களை அடைகிறான்; வாயு தேவதை, சூரியன், சந்த்ரன் ஆகியவர்களை அடைகிறான்; மின்னல், வருணன், இந்த்ரன், ப்ரஜாபதி ஆகியவர்களை அடைகிறான்; அதன் பின்னர் விரஜா நதியைக் கடக்கிறான்; அதன் பின்னர் நடக்கும் வியப்பான செயல்கள் வார்த்தைகளுக்கு எட்டாதவை ஆகும்.