Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம் (பத்தி 9)

அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம்

தஹரகுஹரே தேவஸ்திஷ்டந் நிஷ்த்வர தீர்க்கிகா நிபதித நிஜாபத்யாதித்ஸாவதீர்ண பித்ருக்ரமாத் தமநிமிஹ நஸ்தஸ்மிந் காலே ஸ ஏவ சதாதிகாம் அக்ருதக புர ப்ரஸ்தாநார்த்தம் ப்ரவேசயதி ப்ரபு:

– சேறு நிறைந்த கிணற்றில் விழுந்த தனது குழந்தையை எடுக்கவேண்டும் என்று ஒரு தகப்பன் எவ்விதம் இறங்குவானோ அது போன்று அனைத்து வல்லமையும் பெற்றவனாகிய எம்பெருமான், இதயத்தாமரை என்பதான தஹரா என்னும் ஆகாசத்தில் நிற்கிறான். அந்திம நேரத்தில், அவனே நம்மை என்றும் உள்ளதான ஸ்ரீவைகுண்டத்திற்கு இட்டுச் செல்வதற்காக, நூற்று ஒன்றாவது நாடியில் இந்த உலகில் உள்ளபோது நுழையும்படிச் செய்கிறான்.