Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம் (பத்தி 8)
அர்த்தாநுசாஸந பாகம் – 20.நிர்ணய அதிகாரம்
நன்னிலமாமது நற்பகலாமது நன்னிமித்தம் என்னலுமாமது யாதானுமா மங்கடியவர்க்கு மின்னிலைமேனி விடும் பயணத்து விலக்கிலதோர் நன்னிலையா நடுநாடி வழிக்கு நடைபெறவே.
– மின்னல் போன்று சட்டென்று தோன்றி மறைவதான இந்த சரீரத்தை விட்டு, பரமபதம் கொண்டு சேர்ப்பதால் சிறந்த தன்மை கொண்டதும், அனைத்து நாடிகளின் நடுவில் உள்ளதும் ஆகிய ப்ரஹ்மநாடியின் வழியே, ப்ரபந்நன் ஒருவன் செல்வதற்கு எந்த கால, தேச கட்டுப்பாடும் இல்லை. அவன் அவ்விதம் புறப்படும் இடமே சிறந்த இடம், புறப்படும் நாளே சிறந்த நாள் ஆகும்.