Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம்

கைங்கர்யத்துடன் கூடிய வாஸம்

மூலம் – நிக்ருஹீதேந்த்ரிய க்ராமோ யத்ர யத்ர வஸேந்நர: தத்ர தத்ர குருக்ஷேத்ரம் நைமிசம் புஷ்கரம் ததா என்று சொல்லுகிறவிது கத்யந்தரமில்லாதபோது ஏதேனுமொரு தேசத்திலே வஸித்தாலும் இவன் வாஸத்தாலே அத்தேசமும் ப்ரசஸ்தமாமென்கைக்காக. இதுக்கு சாண்டிலீ வ்ருத்தாந்தம் உதாஹரணமாகக் கண்டு கொள்வது.

– இதிஹாஸ ஸமுச்சயம் (25-18) - நிக்ருஹீதேந்த்ரிய க்ராமோ யத்ர யத்ர வஸேந்நர: தத்ர தத்ர குருக்ஷேத்ரம் நைமிசம் புஷ்கரம் ததா – எந்த ஒருவன் தனது புலன்கள் அனைத்தையும் தன்வசப்படுத்தியபடி வாழ்கின்றானோ, அந்த மனிதன் வாழும் இடத்தில் குருக்ஷேத்ரம், நைமிசாரண்யம், புஷ்கரம் போன்ற அனைத்து திவ்யதேசங்களும் உள்ளன – என்றது காண்க. இதன் கருத்து என்ன? உயர்ந்த திவ்யதேசங்களில் உன்னதமான ஒருவன் வஸிக்க இயலாதபோது, அவன் மற்ற இடங்களில் வசித்தாலும் அந்த இடம் இவன் வசிப்பதன் காரணமாகவே உயர்கிறது. இதனை சாண்டிலீ சரிதத்தில் காண்க (இது பதினெட்டாவது அத்யாயத்தில் உள்ளது).