Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம் (பத்தி 4)

அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம்

வாஸம் செய்வதற்கான இடங்கள் என எம்பெருமான் கூறும் இடங்கள்

மூலம் – திருநாராயணீயத்தில் ஏகபாத ஸ்திதே தர்மே யத்ர க்வசந காமிநி கதம் வஸ்தவ்யமஸ்மாபி: பகவம்ஸ்தத்வதஸ்வ ந: என்று தேவர்களும் ருஷிகளும் விண்ணப்பம் செய்ய, “குரவோ யத்ர பூஜ்யந்தே ஸாதுவ்ருத்தா: சாமாந்திதா: வஸ்தவ்யம் தத்ர யுஷ்மாபி: யத்ர தர்மோ ந ஹீயதே யத்ர தேவாச்ச யஜ்ஞாச்ச தப: ஸத்யம் தமஸ்ததா ஹிம்ஸா ச தர்மஸம்யுக்தா ப்ரசரேயு: ஸுரோத்தமா: ஸ வை தேசோ ஹி வ: ஸேவ்யோ மா வ: அதர்ம: பதா ஸ்ப்ருசேத்” என்று பகவான் அருளிச்செய்தான்.

– ஸ்ரீநாராயணீயத்தில் எம்பெருமானிடம் தேவர்களும் முனிவர்களும் பின்வருமாறு விண்ணப்பம் செய்தனர், மஹாபாரதம் சாந்திபர்வம் (349-85) - ஏகபாத ஸ்திதே தர்மே யத்ர க்வசந காமிநி கதம் வஸ்தவ்யமஸ்மாபி: பகவம்ஸ்தத்வதஸ்வ ந: - பகவானே! இந்தக் கலியுகத்தில் தர்மம் என்பது ஒற்றைக்காலில் நின்றபடி எங்காவது செல்ல முயல்கிறது, இப்படி உள்ளபோது நாங்கள் எப்படி வாழ இயலும் என்பதை நீயே கூறவேண்டும் – என்று கேட்டனர். இதற்கு பகவான் அருளிச்செய்தது மஹாபாரதம் சாந்திபர்வம் (349-86, 87) - குரவோ யத்ர பூஜ்யந்தே ஸாதுவ்ருத்தா: சாமாந்திதா: வஸ்தவ்யம் தத்ர யுஷ்மாபி: யத்ர தர்மோ ந ஹீயதே யத்ர தேவாச்ச யஜ்ஞாச்ச தப: ஸத்யம் தமஸ்ததா ஹிம்ஸா ச தர்மஸம்யுக்தா ப்ரசரேயு: ஸுரோத்தமா: ஸ வை தேசோ ஹி வ: ஸேவ்யோ மா வ: அதர்ம: பதா ஸ்ப்ருசேத் – முனிவர்களே! எந்த இடங்களில் நல்ல ஒழுக்கம் மற்றும் அடக்கம் ஆகியவற்றுடன் கூடிய நல்லவர்கள் மதிக்கப்படுகின்றனரோ, எந்த இடத்தில் தர்மம் குறைவற்று உள்ளதோ, எங்கு சென்று வாழுங்கள்; தேவர்களே! வேதங்கள், யாகங்கள், தவங்கள், ஸத்யம், புலனடக்கம், தர்மத்தை அடியொட்டிய ஹிம்ஸை ஆகியவை எங்கு உள்ளனவோ அந்த இடங்களே உங்களுக்கு ஏற்ற இடமாகும்; உங்களிடம் அதர்மம் காலடி வைக்காது – என்றான்.