Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 19.ஸ்தாந விசேஷ அதிகாரம்
யத்ர ஏகாக்ரக்யம் பவதி பகவத்பாத ஸேவா அர்ச்சநாதே: யத்ர ஏகாந்த்ய வ்யவஸ்தித தியோ யஸ்யகஸ்யாபி லாப: வாஸஸ்தாநம் ததிஹ க்ருதிநாம் பாதி வைகுண்ட கல்பம் ப்ராயோ தேசா முநிபிருதிதா: ப்ராயிக ஔசித்யவந்த:
– எந்த ஓர் இடத்தில் வசிக்கும்போது எம்பெருமானுடைய திருவடி தரிசனம், திருவாராதனம் முதலானவற்றுக்கு ஏற்ற மன ஒருமைப்பாடு உண்டாகிறதோ; எந்த ஓர் இடத்தில் வசிக்கும்போது மற்ற தேவதைகளை அடையாமை, பலனை நோக்காமை என்னும்படியான உறுதியான மனம் கொண்ட ஒருவனை அடைய இயல்கிறதோ – அப்படிப்பட்ட இடம் இந்த உலகில் வாழும் ப்ரபன்னர்களுக்கு ஸ்ரீவைகுண்டம் போன்றே ப்ரகாசமாக உள்ளது. மஹரிஷிகளால் உரைக்கப்பட்ட பெரும்பான்மையான இடங்கள் இது போன்று பலவிதமான தகுதி கொண்டதாகவே உள்ளன.