Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 23)

அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்

ப்ராரப்தேதர பூர்வபாபமகிலம் ப்ராமதிகம் சோத்தரம் ந்யாஸேந க்ஷபயந்நநப்யுபகத ப்ராரப்த கண்டம் ச ந: தீபூர்வோத்தர பாப்மாநாமஜநநாஜ்ஜாதே அபி தந்நிஷ்க்ருதே: கௌடில்யே ஸந்திம் சிக்ஷயா அப்யநதயநம் க்ரோடீகரோதிம் ப்ரபு:

– நாம் ப்ரபத்தி செய்வதற்கு முன்னர் இருந்த பாவங்கள் அனைத்தையும், பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட பாவங்கள் நீங்கலாக, ப்ரபத்தி செய்த பின்னர் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தையும் எம்பெருமான் நீக்குகிறான். பலன் அளிக்கத் தொடங்கிவிட்ட பாவங்களாக இருந்தாலும், நம்மால் ஏற்க இயலாத பாவங்களை அவன் நீக்குகிறான். ப்ரபந்நன் ஒருவனுக்கு ப்ரபத்திக்குப் பின்னர் அறிந்தே செய்யும் பாவங்கள் என்பவை பெரும்பாலும் உண்டாகாது; அப்படியும் உண்டானால், அவை ப்ராயச்சித்தம் மூலம் கழிகின்றன. ஒரு சிலர் முரட்டுத்தன்மையுடன் கூடியவர்களாக ப்ராயச்சித்தம் செய்யாமல் இருந்தால், அவர்களுக்கு மிகவும் சிறிய தண்டனைகளை அளித்து, அவர்களை பாவம் அற்றவர்களாக எம்பெருமான் காக்கிறான்.