Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 22)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி உலகளந்த வளர்தாமரையிணை வன்சரணாக வரித்தவர்தம் களைதானென எழுங்கன்மம் துறப்பர் துறந்திடிலும் இளைதாநிலைசெக எங்கள் பிரான் அருள் தேனேழுமே
– தங்களிடம் உள்ள வலிமையான பாவங்களைக் கண்டு உள்ளம் நடுங்கி, உலகை அளந்தவைகளும் வளர்ந்தபடி உள்ள தாமரை போன்றவைகளும் ஆகிய எம்பெருமானின் திருவடிகளை உறுதியான உபாயம் என்று சிலர் பற்றக்கூடும். இப்படிப்பட்டவர்கள் தாங்கள் எம்பெருமானை அனுபவிக்கவிடாமல் தடுக்கவல்ல தீயசெயல்களைக் கைவிடுவார்கள். இப்படியாக அவர்கள் கைவிட்ட பின்னர், அவர்களது விவேகம் இல்லாத தன்மையானது நீங்கும்படியாக எங்கள் ஸ்வாமியான எம்பெருமானின் கடாக்ஷம் என்னும் தேன் அவர்களிடம் வளரும்.