Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 21)

அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்

பாகவத அபசாரமே முதன்மையாக விலக்கப்படவேண்டியது

மூலம் - இச்ச்லோகங்களில் ப்ராஹ்மணசப்தம் விஷ்ணும் க்ராந்தம் வாஸுதேவம் விஜாநன் விப்ரோ விப்ரத்வம் கச்சதே தத்த்வதர்சீ என்கிற ப்ரக்ரியையாலே விசேஷ விஷயம். ஸாமாந்ய விஷயமானாலும் பாகவத விஷயத்தில் அபராதம் கைமுதிக ந்யாயத்தாலே ஸித்தம். அநுதாபாதுபரமாத் ப்ராயச்சித்தோந்முகத்வத: தத்பூரணாசாபராதா: ஸர்வம் நச்யந்தி பாதச: பூர்வஸ்மிந் வா பரஸ்மிந் வா கல்பே நிர்விண்ண சேதஸாம் நிவர்த்ய தாரதம்யே அபி ப்ரபத்திர்ந விசிஷ்யதே ஏவமேவ லகூநாம் வா குருணாமபி வா ஆகஸாம் ஸக்ருத் ப்ரபத்திரேகைவ ஸத்ய: ப்ரசம காரணம் உளதான வல்வினைக்கு உள்ளம் வெருவி உலகளந்த வளர்தாமரையிணை வன்சரணாக வரித்தவர்தம் களைதானென எழுங்கன்மம் துறப்பர் துறந்திடிலும் இளைதாநிலைசெக எங்கள் பிரான் அருள் தேனேழுமே ப்ராரப்தேதர பூர்வபாபமகிலம் ப்ராமதிகம் சோத்தரம் ந்யாஸேந க்ஷபயந்நநப்யுபகத ப்ராரப்த கண்டம் ச ந: தீபூர்வோத்தர பாப்மாநாமஜநநாஜ்ஜாதே அபி தந்நிஷ்க்ருதே: கௌடில்யே ஸந்திம் சிக்ஷயா அப்யநதயநம் க்ரோடீகரோதிம் ப்ரபு:

– இந்தச் ச்லோகங்களில் உள்ள “ப்ராஹ்மண” என்ற பதம் விசேஷமான ஒரு பொருளை உணர்த்துவதாக உள்ளது. இதனை மஹாபாரதம் ஆநுசாநிக பர்வம் (16-2) - விஷ்ணும் க்ராந்தம் வாஸுதேவம் விஜாநன் விப்ரோ விப்ரத்வம் கச்சதே தத்த்வதர்சீ – இந்த உலகங்கள் அனைத்தையும் அளந்து, எங்கும் பரவி நின்ற வாஸுதேவனை நன்றாக உணர்ந்து கொண்ட ப்ராஹ்மணனே உண்மையான அந்தணன் ஆகிறார் – என்பதன் மூலம் அறியலாம். இவ்விதம் கொள்ளாமல், சாதாரண பொருளில் ”ப்ராஹ்மண” என்ற பதத்தை அந்த ச்லோகங்களில் கைக்கொண்டால், கைமுதிக ந்யாயத்தின்படி அந்தணர்களுக்குத் தீமை இழைத்தாலே தவறு என்னும்போது அடியார்களுக்குச் செய்யும் அபசாரம் மிகப்பெரிய தவறு என்பதாகாதோ? (கைமுதிக ந்யாயம் – தகுதி இல்லாத ஒருவனுக்கு ஏதோ ஒன்று கிட்டும்போது, தகுதி உள்ளவனுக்குக் கிட்டும் என்பதும் தெளிவு) அநுதாபாதுபரமாத் ப்ராயச்சித்தோந்முகத்வத: தத்பூரணாசாபராதா: ஸர்வம் நச்யந்தி பாதச: - “தவறு செய்துவிட்டோம்” என்ற குற்ற உணர்ச்சி, தவறுகள் செய்வதை நிறுத்துதல், தவறுகளுக்கான ப்ராயச்சித்தம் செய்ய எண்ணுதல், ப்ராயச்சித்தம் செய்தல் ஆகியவற்றால் பாவங்கள் அனைத்தும் கால் கால் பாகமாக அழிகின்றன. பூர்வஸ்மிந் வா பரஸ்மிந் வா கல்பே நிர்விண்ண சேதஸாம் நிவர்த்ய தாரதம்யே அபி ப்ரபத்திர்ந விசிஷ்யதே – தங்களது பாவங்களை எண்ணி வருந்தியபடி உள்ளவர்களின் பாவங்களில் அதிகம்-குறைவு என்னும் வேறுபாடு உள்ளபோதிலும், முந்தைய கல்பத்திலோ பிந்தைய கல்பத்திலோ செய்யும் ப்ரபத்தியில் வேறுபாடு இல்லை. ஏவமேவ லகூநாம் வா குருணாமபி வா ஆகஸாம் ஸக்ருத் ப்ரபத்திரேகைவ ஸத்ய: ப்ரசம காரணம் – இப்படியாக சிறிய பாவங்கள், பெரிய பாவங்கள் ஆகிய அனைத்திற்கும் ஒருமுறை செய்யும் ப்ரபத்தி என்பது அனைத்தும் அழியக் காரணமாக உள்ளது.