Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 17)

அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்

பாகவத அபசாரமே முதன்மையாக விலக்கப்படவேண்டியது

மூலம் – இப்படி இவனுக்குப் பரிஹரணீயங்களானவற்றில் ராஜதாராபராதம் போலே பாகவதாபசாரம் ப்ரதாநமென்னுமிடத்தை ஏவம் முக்திபலா நியம: தத்வஸ்தாவத்ருதே: தத்வஸ்தாவத்ருதே: என்கிற ஸூத்ரத்திலே பாஷ்யகாரர் அருளிச்செய்தார்.

– ப்ராயச்சித்தம் செய்யவேண்டிய அபசாரங்களில் அரசனின் பத்தினிகளுக்குச் செய்த அபசாரம் போன்று முதன்மையாக உள்ளது பாகவத அபசாரமே ஆகும். இதனை ஸ்ரீபாஷ்யத்தில் பாஷ்யகாரர் (3-4-51) - ஏவம் முக்திபலா நியம: தத்வஸ்தாவத்ருதே: தத்வஸ்தாவத்ருதே: - முக்தி என்னும் பலன் உடனே கைகூடும் என்னும் அவசியம் இல்லை; அதற்கும் சில காலநிர்ணயம் உள்ளது – என்று அருளிச்செய்தார்.