Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 13)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை
மூலம் – சிஷ்டதயா வ்யபதேச்யரான ஸமர்த்தருக்கு லோக ஸங்க்ரஹத்துக்காகவும் ப்ரஸித்த நிமித்தங்களில் யதாசக்தி ப்ரஸித்த ப்ராயசித்தம் உசிதம். அது தவிருகையும் முன் சொன்ன ஆஜ்ஞாதிலங்கநமாம். ஸைரந்திகைக்கு ஸேவை தப்பினபோது தாதாத்விகமான பரிமளாதிகளையும் இழந்து பயாநுபவமும் உண்டாமாப்போலே ஆஜ்ஞாதி லங்கநம் இரண்டுபடி அநர்த்தம்.
– மிகுந்த ஞானம் மற்றும் ஒழுக்கம் உள்ளவர்களாக உள்ள சிலர் பலராலும் மதிக்கப்பட்டபடி இருப்பர். இவர்கள் தாங்கள் செய்த பாவங்களுக்கான ப்ராயச்சித்தம் என்பதை அனைவரது முன்னிலையிலும் செய்வதே சரியானதாகும். இதன் காரணம், மற்றவர்களுக்கு இவர்களது இச்செய்கை ஒரு உதாரணமாக இருக்கவேண்டும் என்பதால் ஆகும். இப்படிச் செய்யவில்லையென்றால் அது எம்பெருமானின் ஆணையை மீறுவதாகவே ஆகும். பெண்களின் கூந்தலை அழகுபடுத்தும் பெண் ஒருவள் ஏதோ ஒரு காரணத்தால் தண்டிக்கப்பட்டால் அவளுக்குக் கிட்டவேண்டிய ஊதியமான பரிமளங்களும் கிட்டுவதில்லை, மேலும் என்ன நடக்குமோ என்ற அச்சமும் உண்டாகிறது. ஆகவே எம்பெருமானின் ஆணைகளை மீறுவதன் மூலம் இரண்டுவிதமான தண்டனைகள் கிட்டலாம்.