Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 12)

அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்

அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை

மூலம் – பூர்வோத்தராகத்திலும் பரமைகாந்திகளான இவர்கள் இருவருக்கும் யம வச்யதாதிகளில்லையென்னுமிடம் யஸ்மிந் கஸ்மிந் குலே ஜாதா யத்ர குத்ர நிவாஸிந: வஸுதேவ ரதா நித்யம் யமலோகம் ந யாந்தி தே இத்யாதி வசநபலத்தாலே ஸித்தம். ஒரு பாபந்தானே ஜாதிகுணாதி அதிகாரபேதத்தாலே குரு லகு பல பேதவத்தாயிருக்குமென்னுமிடம் ஸர்வஸம்ப்ரதிபந்நம். இவ்வர்த்தம் ராஜபுத்ராபராதிகளிற்போல லோகமர்யாதையாலும் உபபந்நம். ந ப்ராக்வத்புத்திம் பூர்வாதே ந சாத்யந்தமநுக்ரஹ: லகுர்தண்ட: பரபந்நஸ்ய ராஜபுத்ராபராதவத் ஆகையால் அதிகாராநுரூபமாக லகுபலமும் வாராமைக்காகப் புந:ப்ரபதநம் விதிக்கப்படுகிறது.

– பக்தி நிஷ்டன் மற்றும் பரபந்நன் ஆகிய இருவரும் தெரிந்தே பாவங்களைச் செய்தாலும் இவர்கள் இருவருக்கும் யமனிடம் சிக்குதல் என்பது இல்லை (நரகம் இல்லை) என்னும் கருத்தை - யஸ்மிந் கஸ்மிந் குலே ஜாதா யத்ர குத்ர நிவாஸிந: வஸுதேவ ரதா நித்யம் யமலோகம் ந யாந்தி தே – எந்தக் குலத்தில் பிறந்தாலும், எங்கு வாழ்ந்தாலும் எம்பெருமானிடம் எப்போதும் ஈடுபட்டபடி உள்ளவர்கள் யமலோகம் புகுவதில்லை – என்று கூறியதன் மூலம் காண்க. ஒரே பாவத்திற்கான தண்டனை என்பது குலம், ஒழுக்கம் போன்றவை காரணமாகச் சிலருக்கு அதிகமாகவும் சிலருக்குக் குறைவாகவும் உள்ளதைப் பலரும் ஒப்புக் கொள்வதைக் காணலாம். இந்தக் கருத்தை ராஜகுமாரர்கள் தவறு செய்தால் பெறும் தண்டனை மூலம் அறியலாம் (அவர்களுக்குத் தண்டனை குறைவாக இருக்கும்). இதனை - ந ப்ராக்வத்புத்திம் பூர்வாதே ந சாத்யந்தமநுக்ரஹ: லகுர்தண்ட: பரபந்நஸ்ய ராஜபுத்ராபராதவத் – ப்ரபந்நன் ஒருவன் தனக்குத் தெரிந்தே பாவங்கள் செய்ய நேரிட்டால் அவனுக்கு ப்ரபத்திக்கு முன்னர் உள்ள நிலைமை போன்று அதிக தண்டனை அளிக்கப்படுவதில்லை; இதே போன்று அவனுக்கு எம்பெருமானின் அதிகமான க்ருபையும் கிட்டுவதில்லை; இப்படிப்பட்ட ப்ரபந்நனுக்கு அரசகுமாரன் போன்று குறைவான தண்டனையே கிட்டுகிறது – என்பதன் மூலம் உணரலாம். ஆக இந்தக் குறைவான தண்டனையும் கிட்டக்கூடாது என்பதற்காகவே மீண்டும் இவர்களுக்கு ப்ரபத்தி செய்தல் என்பது கூறப்பட்டது.