Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 10)

அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்

அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை

மூலம் – ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி என்று ஸாமாந்யேந சொல்லச் செய்தேயும், ப்ராயச்சித்திரியம் ஸா அத்ர யத்புந: சரணம் வ்ரஜேத் என்று விசேஷிக்கையாலே புத்திபூர்வோத்தராகத்துக்கு ப்ரபத்த்யநந்தரம் ப்ராயச்சித்தமாக ப்ராப்தமாயிற்று.

– கீதையில் (18-66) - ஸர்வபாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி – அனைத்து பாவங்களில் இருந்தும் விடுவித்து – என்று கூறினான். ஆயினும் லக்ஷ்மீ தந்த்ரத்தில் (17-91) - ப்ராயச்சித்திரியம் ஸா அத்ர யத்புந: சரணம் வ்ரஜேத் – அபராதம் உண்டானால் மீண்டும் எம்பெருமானைச் சரணம் புகுவதே ப்ராயச்சித்தம் – என்று கூறப்பட்டது. ஆகவே தெரிந்தே செய்கின்ற பாவங்களுக்கு மீண்டும் ப்ரபத்தி செய்வதே அதற்கான ப்ராயச்சித்தம் என்றாகிறது.