Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 5)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
அறிந்தே செய்கின்ற பாவங்களுக்குப் பிராயச்சித்தம் செய்யாதபோது சிறு தண்டனை
மூலம் – இப்படி ம்ருதுப்ரக்ருதிகளை க்ஷமைகொள்ளப் பண்ணுவித்தல் கடிந ப்ரக்ருதிகளுக்கு சிக்ஷாரூபமான தண்டவிசேஷம் பண்ணுதல் செய்கிறவிடமும் பூர்வப்ரபத்தி பலமான க்ஷமையின் ப்ரகாரபேதமென்று சிக்ஷகனான சேஷி பக்கலிலே க்ருதஜ்ஞதை நடக்கைக்காக புத்திபூர்வோத்தராகத்தையும் க்ஷமிக்குமென்று சிலர் சொன்னார்கள்.
– ஒரு சிலரை அவர்களது தவறுகளுக்காகப் பிராயச்சித்தம் செய்தபின்னர் மன்னிப்பதும், ஒரு சில கடினமானவர்களை அவர்களது தவறுகளுக்காகத் தண்டித்தல் என்பது ஸர்வேச்வரனின் மன்னிக்கும் தன்மையாலேயே ஆகும். இத்தகைய செயல்கள் அவர்கள் முன்னர் செய்த ப்ரபத்தியின் காரணத்தால் உண்டாகிறது. இப்படியாகத் தங்களைத் திருத்தியதற்காக இவர்கள் எம்பெருமானிடம் நன்றியுடன் இருத்தல் வேண்டும். இந்தக் கருத்தை வலியுறுத்தும் பொருட்டே ஒரு சிலர், “தெரிந்தே செய்யும் தவறுகளையும் எம்பெருமான் மன்னிக்கிறான்”, என்றனர்.