Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 18.அபராதபரிஹார அதிகாரம்
ஸ்வச்ச ஸ்வாது ஸதா அவதாத ஸுபகாம் தைவாதயம் தேஹப்ருத் மாலிந்ய ப்ரசமாய மாதவ தயா மந்தாகிநீம் விந்ததி யத்யப்யேவமஸாவஸார விஷய ஸ்ரோத: ப்ரஸூதை: புந: பங்கைரேவ கலங்கயந் ப்ராஜ்ஞைர்ந ஸம்லிஷ்யதே
– இந்த சரீரத்தைத் தாங்கி நிற்கின்ற ஜீவன் தற்செயலாக அடைவது என்னவென்றால்: சிறிதும் களங்கம் அற்றதும், இனிமையாக உள்ளதும், தூய்மையாக உள்ளதால் பாவங்களைப் போக்கவல்லதும், அனைத்தையும் அளிக்கவல்ல உயர்ந்த குணங்கள் கொண்டதுமான எம்பெருமானின் தயை என்னும் கங்கையை, மோக்ஷத்திற்குத் தடையாக உள்ள பாவம் நீங்கும் பொருட்டு அடைகிறான். இப்படியாக உயர்ந்த வஸ்து கிட்டியபோதிலும், ஒரு ப்ரபன்னன் சற்றும் ஸாரம் இல்லாத உலக விஷயங்கள் என்னும் வெள்ளத்தின் காரணமாக உண்டாகும் சேற்றில் சிக்குகிறான். இதன் மூலம் தனது சரீரத்தை மீண்டும் அசுத்தப்படுத்தியவனாக, அறிஞர்களால் அண்டத் தகாதவனாக உள்ளான்.