Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 17)

அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்

ச்ருதி ஸ்ம்ருதி ஆசாரை: ஸ்வமதி பதிபி: சுத்தமநஸாம் ஸுஸங்கல்பை: தர்ம்யை: குல சரண தேசாதி ஸமயை: நியோகை: யோக்யாநாம் நியமயிது: ஆதே: அபிமதம் நிமித்த ஸ்வப்நாத்யை: நிபுணம் அந்திச்சதி புத:

– வித்வானாக உள்ளவன் செய்வது என்ன? வேதங்கள், ஸ்ம்ருதிகள், ஆசாரங்கள், தன்னுடைய புத்தி, தூயவர்களின் ஸங்கல்பம், தர்மங்களின் வழியில் இருந்து மாறுபடாமல் உள்ள குலம்-சாகை-தேசம் போன்ற கட்டுப்பாடுகள், பெரியவர்களின் ஆணைகள், சகுனங்கள் மற்றும் கனவுகள் போன்ற பலவற்றால் இந்த உலகத்தை அடக்கி ஆள்பவனும், அனைத்திற்கும் காரணமானவனும் ஆகிய ஸர்வேச்வரனின் திருவுள்ளத்தை நன்கு அறிந்து கொள்கிறான்.