Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 15)

அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்

எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை

மூலம் – ஆஜ்ஞா அநுஜ்ஞா விபாகேந த்விதா சாஸ்த்ரீய புத்தி: நிக்ரஹ அநுதயாய ஆத்யா பரா தத்தத் பல ஆப்தயே அநுஜ்ஞயா ப்ரவ்ருத்தே அபி க்ரம கோப ஆதி ஸம்பவே ஆஜ்ஞா அதிக்ரம தோஷ: ஸ்யாத் நியம: அத: துரத்யய: ப்ரத்யவாய பரீஹாரே பலாந்தர ஸமந்விதே தத்ர ஸம்வலிதம் ப்ராஹு: அதிகாரம் விசக்ஷணா: நித்ய காம்ய ஸ்வரூப ஐக்யே விநியோக ப்ருதக்த்வத: பலார்த்தம் க்ரியமாணே அபி நித்யம் பவதி தந்த்ரத: அநுஜ்ஞா மாத்ர ஸித்தேஷு கைங்கர்யேஷு விசக்ஷணை: அக்ருதௌ தத் பல அலாப: ந து தோஷ இதி ஈரிதம்

– ஆஜ்ஞா அநுஜ்ஞா விபாகேந த்விதா சாஸ்த்ரீய புத்தி: நிக்ரஹ அநுதயாய ஆத்யா பரா தத்தத் பல ஆப்தயே – சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட விதிமுறைகள் ஆஜ்ஞை (செய்தே தீர வேண்டும்) மற்றும் அநுஜ்ஞை (செய்தால் நலம் விளையும்) என்று இருவகைப்படும். ஆஜ்ஞை என்பது எம்பெருமானின் தண்டனையில் இருந்து தப்புவதற்கும், அநுஜ்ஞை என்பது அந்தந்த பலனைப் பெருவதற்கும் வழி வகுக்கும். அநுஜ்ஞயா ப்ரவ்ருத்தே அபி க்ரம கோப ஆதி ஸம்பவே ஆஜ்ஞா அதிக்ரம தோஷ: ஸ்யாத் நியம: அத: துரத்யய: - அநுஜ்ஞை விதியால் தொடங்கப்பட்ட கைங்கர்யம் என்றபோதும், அதில் ஏதேனும் முறை தவறுதல் போன்ற குற்றங்கள் உண்டானால், ஆஜ்ஞையை மீறினால் எந்தவிதமான தோஷம் உண்டாகுமோ, அதுவே உண்டாகும். ஆகவே சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட கட்டுப்பாடுகள் மீற இயலாதவை ஆகும். ப்ரத்யவாய பரீஹாரே பலாந்தர ஸமந்விதே தத்ர ஸம்வலிதம் ப்ராஹு: அதிகாரம் விசக்ஷணா: - ஒரே கர்மம் சாஸ்த்ரங்களில் கூறப்பட்ட விதிகளை மீறாமல் இருப்பதற்கும், மற்ற பலன்களை அடைவதற்கும் என்று இருக்கலாம். இதில் அதிகாரம் சேர்ந்துள்ளதாக பண்டிதர்கள் கூறுகின்றனர். நித்ய காம்ய ஸ்வரூப ஐக்யே விநியோக ப்ருதக்த்வத: பலார்த்தம் க்ரியமாணே அபி நித்யம் பவதி தந்த்ரத: - ஒரே கர்மம் நித்யகர்மமாகவும் (செய்தே ஆகவேண்டும்), காம்ய கர்மமாகவும் (பலனுக்காகச் செய்யப்படுபவை) இருக்கலாம். இப்படி உள்ளபோது பலனுக்காகச் செய்யப்படும் அதே கர்மம், விதிமுறைகளுக்காகவும் செய்யப்படும் கர்மம் என்றும் கொள்ளப்படும். அநுஜ்ஞா மாத்ர ஸித்தேஷு கைங்கர்யேஷு விசக்ஷணை: அக்ருதௌ தத் பல அலாப: ந து தோஷ இதி ஈரிதம் - ஒரு சில குறிப்பிட்ட பலன்களுக்கான கர்மங்களை இயற்றும்போது ஏதேனும் தோஷம் உண்டானால், அந்தப் பலன்கள் கிட்டாமல் போகும். இதனால் சாஸ்த்ரங்களை மீறுதல் என்னும் தோஷம் உண்டாவதில்லை என பண்டிதர்கள் கூறுகின்றனர்.