Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 14)
அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்
எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை
மூலம் – இந்த நியமாநுவர்த்தனம் பூர்ணோபாயரல்லாத அதிகாரிகளுக்கு உபாய பூர்த்தி விரோதியை சமிப்பித்துக் கொண்டு பகவத்ப்ரஸாதநமாய் இருக்கும். பூர்ணோபாயருக்கு அதிலங்கனஹேதுக அப்ரீதி பிறவாதபடி பண்ணிக்கொண்டு பகவத்ப்ரீணநமாயிருக்கும்.
– ஒரு சிலர் ப்ரபத்தி என்ற உபாயத்தைக் கைக்கொள்ளாமல் இருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்டதைக் கைக்கொண்டால், அதுவே அவர்களது ப்ரபத்தி உபாயத்திற்குத் தடையாக உள்ள விரோதிகளை நீக்கி, எம்பெருமானின் கருணையையும் சம்பாதித்துக் கொடுக்கும். ஒரு சிலர் ப்ரபத்தி என்ற உபாயத்தைக் கைக்கொண்டிருக்கக்கூடும். அப்படிப்பட்டவர்கள் சாஸ்த்ரங்களால் விதிக்கப்பட்டதை மீறாமல் இருந்தால், அதுவே எம்பெருமானுக்கு “சாஸ்த்ரங்களை மீறுவதால் உண்டாகும் மகிழ்ச்சியின்மை” என்பது உண்டாகாதபடி தடுத்து, எம்பெருமானின் மகிழ்வையும் சம்பாதித்துக் கொடுக்கும்.