Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 13)

அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்

எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை

மூலம் – இவ்வாஜ்ஞாதிலங்கனம் ப்ரஹர்ஷயிஷ்யாமி என்று உத்தேச்யையான பகவத் ப்ரீதிக்கு விரோதியானபடியாலே இச்சாஸ்த்ரீய நியமம் ரஹஸ்ய த்ரயத்தில் விரோதி நிவ்ருத்தியை அநுஸந்திக்குமிடங்களிலே அநுஸந்திக்கப் ப்ராப்தம்.

– எம்பெருமானின் கட்டளைகளை மீறுதல் என்பது, நம்முடைய இலக்காக உள்ள ”எம்பெருமானின் மகிழ்ச்சிக்காகவே நாம் உள்ளோம்” என்பதற்கு விரோதியாகவே உள்ளது. நாம் அவனது மகிழ்விற்காகவே உள்ளோம் என்பதை ஸ்தோத்ர ரத்னம் (46) – ப்ரஹர்ஷயிஷ்யாமி – எப்போது உன்னை மகிழச் செய்வேன் – என்பதில் காணலாம். ஆகவே சாஸ்த்ரங்களில் உள்ளவற்றைப் பின்பற்றுதல் என்பதை, மூன்று ரஹஸ்யங்களிலும் (திருமந்த்ரம், த்வயம், சரம ச்லோகம்) உள்ள விரோதி நீக்கம் பற்றிக் கூறும் இடங்களில் கண்டு கொள்க.