Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 11)
அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்
எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை
மூலம் – நிஜகர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித: உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேதேவே து தாமபீ: என்று ஸ்ரீகீதார்த்தஸங்க்ரஹத்தில் ப்ரீத்யைவ என்கிற அவதாரணத்தாலே ஸாதநத்வ புத்தியை வ்யவச்சேதித்தார் என்னுமிடம் உபாயதாம் பரித்யஜ்ய என்று விவரிக்கையாலே வ்யக்தம். சாஸ்த்ரீய கைங்கர்யத்தில் ப்ரீதியினுடைய ப்ரேரகத்வாதிசயம் விவக்ஷிதமானாலும் நிஜகர்மாதி பக்த்யந்தம் என்கிற இவற்றின் ஸ்வரூபத்துக்குச் சாஸ்த்ரமே ப்ரமாணமென்னுமிடம் நிஜகர்ம சப்தத்தாலே தர்சிதமாயிற்று. இது சாஸ்த்ரீய நியமம்: அவிப்லவாய தர்மாணாம் பாலநாய குலஸ்ய ச ஸங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதா ஸ்தாபநாய ச ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவதேவஸ்ய சார்ங்கிண: மநீஷீ தைவிகாசாரம் மநஸா அபி ந லங்கயேத் என்று ப்ரபத்த்யாயத்திலே ப்ரஸித்தம்.
– தர்மங்கள் மாறாமல் இருக்கவும், குலங்களைக் காப்பாற்றவும், இந்த உலகை தூய்மையான வழியில் நிலையாக நிறுத்தவும், சாஸ்த்ரங்களுக்கான மரியாதை என்றும் உள்ளதற்கும் ப்ரபன்னன் ஒருவன் வேதங்களில் விதிக்கப்பட்ட விதிகளை மனதாலும் மீற எண்ணக்கூடாது. இதனை ப்ரபன்னன் ஏன் செய்யவேண்டும் என்றால் என்னுடைய மகிழ்ச்சிக்காகவும், அனைவருக்கும் தேவனும் சார்ங்கம் என்னும் வில்லை உடையவனும் ஆகிய எம்பெருமானின் மகிழ்ச்சிக்காகவும் ஆகும்.
– கீதார்த்த ஸங்க்ரஹத்தில் (31) - நிஜகர்மாதி பக்த்யந்தம் குர்யாத் ப்ரீத்யைவ காரித: உபாயதாம் பரித்யஜ்ய ந்யஸ்யேதேவே து தாமபீ: - கர்மயோகம் தொடங்கி பக்தியோகம் முடிய அவரவர்களின் வர்ணத்திற்கு ஏற்றவற்றை எம்பெருமான் மீது அன்பின் அடிப்படையிலேயே செய்யவேண்டும்; அவைகளை உபாயம் என்று கொள்ளாமலும், மற்ற தேவதைகளைக் கண்டு அஞ்சாமலும், எம்பெருமானே உபாயம் என்று கொண்டும் இருத்தல் வேண்டும் – என்றார். இங்கு – ப்ரீத்யைவ – அன்பினால் மட்டுமே – என்னும் பதம் மூலம் இவை உபாயங்கள் என்று எண்ணக்கூடிய புத்தியைத் தள்ளினார். இதனை - உபாயதாம் பரித்யஜ்ய – இவைகள் உபாயங்கள் அல்ல எனத் தள்ளவேண்டும் – என்பதன் மூலம் தெளிவாக அறியலாம். எம்பெருமான் மீது ஒருவன் கொண்டுள்ள அன்பானது அவனை சாஸ்த்ரங்கள் விதித்துள்ள வழிகளில் கைங்கர்யத்தில் ஈடுபடுத்தவல்ல வலிமை கொண்டதாகும். ஆனால் - நிஜகர்மாதி பக்த்யந்தம் - கர்மயோகம் தொடங்கி பக்தியோகம் முடிய அவரவர்களின் வர்ணத்திற்கு ஏற்ற – என்பதன் மூலம், இந்தக் கைங்கர்யங்களாகிய கர்மங்களின் ஸ்வரூபம் அனைத்திற்கும் சாஸ்த்ரங்களே ப்ரமாணங்கள் என்பது உணர்த்தப்பட்டது. இந்த விதியானது சாஸ்த்ரங்களில் விதிக்கப்பட்டது என்பது கீழே உள்ள லக்ஷ்மீ தந்த்ரம் (17-93, 94) மூலம் அறியலாம்: அவிப்லவாய தர்மாணாம் பாலநாய குலஸ்ய ச ஸங்க்ரஹாய ச லோகஸ்ய மர்யாதா ஸ்தாபநாய ச ப்ரியாய மம விஷ்ணோச்ச தேவதேவஸ்ய சார்ங்கிண: மநீஷீ தைவிகாசாரம் மநஸா அபி ந லங்கயேத்