Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 3)

அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்

எம்பெருமானார் தனது அந்திம காலத்தில் உரைத்தவை

மூலம் – அது எங்ஙனே என்னில், எம்பெருமானார் திருநாட்டுக்கு எழுந்தருளுகிறபோது ஸ்ரீபாதத்திலே ஸேவித்திருந்த முதலிகளுடைய ஆர்த்தியைக் கண்டருளி இவர்களை அழைத்தருளி, “என்னுடைய வியோகத்தில் தேஹத்யாகம் பண்ணினாருண்டாகில், ஆளவந்தார் ஸ்ரீபாதமே! என்னோடு அவர்களுக்கு ஸம்பந்தமில்லை”, என்றருளிச்செய்ய, இவர்களும் இதைக்கேட்டு மிகவும் சோகார்த்தராய், “இனி எங்களுக்குச் செய்ய அடுப்பது எது?”, என்று விண்ணப்பம் செய்ய, இவர் அருளிச் செய்தருளின வார்த்தை:

– உடையவர் திருநாட்டு எழுந்தருளும் அந்திம காலத்தில், அவருடைய திருவடிகளைப் பற்றியபடி அவரது சிஷ்யர்கள் சோகத்தில் ஆழ்ந்து அமர்ந்திருந்தனர். அவர்களுடைய துயரத்தைக் கண்ட எம்பெருமானார் அவர்களைத் தன்னிடம் அழைத்தார். அவர்களிடம், “நான் எனது உயிரை விட்டபின்னர் யாரும் தங்களது உயிரை மாய்த்துக் கொள்ள முயற்சி செய்யக்கூடாது. அவ்விதம் யாரேனும் செய்தார்கள் என்றால், ஸ்வாமி ஆளவந்தாரின் திருவடிகளின் மீது ஆணையாக, அவர்களுக்கு என்னுடனான தொடர்பு நீங்கிவிடும்”, என்றார். இதனைக் கேட்ட சிஷ்யர்கள் மேலும் சோகம் கொண்டவர்களாக எம்பெருமானாரிடம், “அப்படி என்றால், நாங்கள் வேறு என்ன செய்யவேண்டும்?”, என்று உடையவரிடம் கேட்டனர். இதற்கு உடையவர் பின்வருமாறு அருளிச்செய்தார் (இவை ஐந்து ஆகும். இவை ஒன்றன் பின் ஒன்றாக கீழே கொடுக்கப்பட்டுள்ளன):