Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம் (பத்தி 1)

அர்த்தாநுசாஸந பாகம் – 17.சாஸ்த்ரீய நியமந அதிகாரம்

முகுந்தே நிக்ஷிப்ய ஸ்வபரம் அநதோ முக்தவத் அஸௌ ஸ்வதந்த்ர ஆஜ்ஞாஸித்தம் ஸ்வயம் அவிதித ஸ்வாமி ஹ்ருதய: பரித்யாகே ஸத்ய: ஸ்வ பர விவித அநர்த்த ஜநநாத் அலங்க்யாம் ஆமோக்ஷாத் அநுஸரதி சாஸ்த்ரீய ஸரணிம்

– ஒரு ப்ரபந்நன் தன்னுடைய பொறுப்புகள் முழுவதையும் எம்பெருமானிடம் ஸமர்ப்பணம் செய்த பின்னர், தனது பாவங்களை அனைத்தும் நீங்கப் பெற்றவனாக, முக்தனின் நிலையை அடையக்கூடும். ஆயினும் அவன் தான் உள்ள ஸம்ஸார நிலை காரணமாக எம்பெருமானின் உள்ளத்தை அறியாதவனாக, தான் செய்யவேண்டிய கடமைகளைச் செய்யாமல் விடக்கூடும். இதனால் அவன் தனக்கும் தன்னைச் சார்ந்தவர்களுக்கும் தீமைகளை ஏற்படுத்தக்கூடும். இதனை உணரும் ஒருவன் - சுதந்திரமான எம்பெருமானின் ஆணையால் உண்டாக்கப்பட்டதும், மீறாமல் பின்பற்றப்பட வேண்டியதும் ஆகிய சாஸ்த்ரங்கள் கூறும் நெறிகளை மோக்ஷம் உண்டாகும்வரை பின்பற்றுகிறான்.