Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 17)
அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்
நாதே ந: த்ருணம் அந்யத் அந்யத் அபி வா தந்நாபி நாலீகிநீ நாலீக ஸ்ப்ருஹணீய ஸௌரபமுசா வாசா ந யாசாமஹே சுத்தாநாம் து லபேமஹி ஸ்திரதியாம் சுத்தாந்த ஸித்தாந்திநாம் முக்தைச்வர்ய திந ப்ரபாத ஸமயாஸித்தம் ப்ரஸத்திம் முஹு:
– எம்பெருமானின் அடியார்களாகிய நமது வாக்குகள் அவனது திருநாபி என்னும் குளத்தில் தோன்றிய தாமரையும் விரும்பும் நறுமணம் கொண்டுள்ளது. இந்த வாக்கைக் கொண்டு நம்முடைய ஸ்வாமியான எம்பெருமானிடம் புல் போன்று அற்பமான செல்வம், இந்த்ர பதவிகள், ப்ரஹ்மபதம், கைவல்யம், மோக்ஷம் போன்ற எதனையும் யாசிக்க மாட்டோம். முக்தர்களுக்குச் செல்வமாக பரிபூர்ணமான பகவத் அநுபவம் உள்ளது. இதனைப் பகல்பொழுது என்று கொண்டால், இதன் இனிமையான காலைப்பொழுது போன்று எது உள்ளது என்றால் – தூய்மையானவர்களும், எம்பெருமானிடம் அசைக்க இயலாத உறுதி கொண்டவர்களும், எம்பெருமான் விஷயத்தில் பதிவ்ரதைகளின் கற்பு உள்ளவர்களும் ஆகிய பாகவதர்களின் அநுக்ரஹமே ஆகும். இதனை நாம் அடைவோம்.