Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 16)
அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்
வேதம் அறிந்த பகவர் வியக்க விளங்கிய சீர் நாதன் வகுத்த வகை பெறுநாம் அவன் நல்லடியார்க்கு ஆதரமிக்க அடிமையிசைந்து அழியா மறைநூல் நீதி நிறுத்த நிலை குலையாவகை நின்றனமே
– வேதங்களை நன்று அறிந்த பாகவதர்களும் வியக்கும்படியான உயர்ந்த திருக்கல்யாண குணங்களைக் கொண்ட எம்பெருமான் நமக்கு இட்ட கட்டளையை (பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்தல்) நாம் அறிந்தோம். அவனுடைய சிறந்த அடியார்களுக்கு அன்புடன் கூடிய கைங்கர்யத்தைச் செய்வது என்பதை ஒப்புக் கொண்டோம். எப்போதும் அழியாமல் உள்ள வேதங்கள் கூறிய தர்ம மார்க்கத்தின் நிலையில் நின்று, முறை தவறாமல் நடந்தோம்.