Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 15)

அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்

பாகவத சேஷத்வமும் பாகவத சேஷித்வமும்

மூலம் – இப்படி நிச்சிதார்த்தராய் ஸாரவித்துக்களான க்ருதக்ருத்யருக்கு அபராதருசியும் அதிசங்கையும் அன்யதேவதா ஸ்பர்சமும் ஆத்மாதீந போகமும் ஆத்மார்த்த போகமுமாகிற பழுதில்லாத பரமைகாந்திகளுடைய ப்ரஸாதமே எப்போதும் ஸ்வயம் ப்ரயோஜநமாக அபேக்ஷணீயம்.

– இப்படியாகத் தங்களது புருஷார்த்தத்தின் நிலைமையை உணர்ந்து, தங்களது நிலையை நன்றாக உணர்ந்தவர்கள் எம்பெருமானிடமும் பாகவதர்களிடமும் அபசாரப்படுதல் என்னும் ருசியைக் கைவிடுவர்; அவர்களைக் குறித்தி எந்தவிதமான சந்தேகமும் கொள்ளமாட்டார்கள்; எம்பெருமானைத் தவிர மற்ற தேவதைகளை நாட மாட்டனர்; தன்னுடைய இன்பத்திற்காகவோ, தனது சுதந்திரம் மூலமாக இன்பம் அடைவதாக எண்ணியோ ஏதும் செய்ய மாட்டனர்; பாகவதர்களின் க்ருபையே தங்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக எண்ணுவர்.