Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 14)
அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்
பாகவத சேஷத்வமும் பாகவத சேஷித்வமும்
மூலம் – இப்படி ஸ்வாமிக்கு இஷ்டவிநியோகார்ஹராய்க் கொண்டு சேஷிகளாய் நிற்கை தன்னாலே இருவரும் ஸ்வரூபம் பெற்றார்கள். ஸ்வாபீஷ்டமான பாகவதசேஷத்வமும் அதின் பலமான பாகவதகைங்கர்யமும் ஸித்திக்கையாலே இருவரும் புருஷார்த்த காஷ்டை பெற்றார்கள். இருவரையும் இப்படிப் பரஸ்பர சேஷ சேஷிகளாக நியமித்து ரஸிக்கையாலே ஈச்வரன் தன் ஈச்வரத்வமும் போக்த்ருத்வமும் பெற்றான். இப்ப்ரகாரத்தாலே தங்களுக்கு வந்த சேஷத்வ சேஷித்வாதிகளெல்லாம் ஈச்வரனுடைய போக்த்ருத்வத்துக்குச் சேஷமென்று தெளிகையாலே இருவர்க்கும் கோதற்ற புருஷார்த்த காஷ்டை உண்டாகிறது.
– இப்படியாக இருவரும் ஒருவருக்கொருவர் எம்பெருமானின் ஸங்கல்பத்தால் சேஷியாக (ஒருவருக்கொருவர் எஜமானர்கள்) இருப்பதன் மூலம் தங்களது ஸ்வரூபத்தை உணர்கின்றனர். தங்களது விருப்பமான பாகவதர்களுக்கு அடிமையாக இருப்பதன் பலனான பாகவத கைங்கர்யத்தை இவர்கள் அடைகின்றதால், அடையப்படவேண்டிய புருஷார்த்தத்தின் எல்லையை அடைந்துவிடுகின்றனர். இப்படியாக ஒருவருக்கொருவர் தொண்டனாகவும் எஜமானனாகவும் உள்ள நிலையைக் கண்டு மகிழ்வதால், ஈச்வரன் தன்னுடைய ஈச்ரவத்தன்மை மற்றும் இன்பமாக உள்ள தன்மை ஆகியவற்றை அடைந்துவிடுகிறான். தாங்கள் ஒருவருக்கொருவர் சேஷனாகவும் சேஷியாகவும் (கைங்கர்யம் செய்பவராகவும், கைங்கர்யம் ஏற்பவராகவும்) உள்ளதைக் கண்டு எம்பெருமான் இன்பம் அடைகிறான் என்று உணர்ந்து கொள்கின்றனர். இதனால் இவர்களுக்கு தோஷம் இல்லாத புருஷார்த்த எல்லை கிட்டுகிறது.