Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 13)

அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்

பாகவத சேஷத்வமும் பாகவத சேஷித்வமும்

மூலம் – இப்படி ஈச்வரேச்சையாலே இருவரும் பரஸ்பரம் அதிசயாதாயகராக விநியுக்தராகையாலே இருவருக்கும் பாகவதசேஷித்வஸம்பந்தம் ப்ராமாணிகம். குணவசீக்ருதனான தன் நினைவாலே பகவத்விஷயத்திலும் பாகவத விஷயத்திலும் வரும் தாஸத்வம் போகவர்த்தகமாய்க் கொண்டு தன்னேற்றமாயிருக்கும். இவ்விடத்தில் ஈச்வரன் ஸ்வாதந்த்ர்ய ஸஹக்ருதையான தன் இச்சையாலே பாகவதர்க்கெல்லாம் சேஷித்வத்தை உண்டாக்கும். இவர்களிச்சையையும் கூட்டிக் கொண்டு இவர்களுக்கு பாகவத சேஷத்வத்தை உண்டாக்கும்.

– இவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் தொண்டு செய்வது என்பது எம்பெருமானின் இச்சையால் உண்டாவதால், இந்த சேஷித்வ ஸம்பந்தம் என்பது சாஸ்த்ரங்களால் ஏற்கப்படும் என்றே கொள்ளவேண்டும். பகவானுக்கு அல்லது பாகவதருக்கு அவர்களுடைய குணங்களைக் கண்டு வசீகரிக்கப்பட்டு, அவர்களுக்குத் தொண்டு செய்யும்போது தன்னுடைய இச்சையால் தொண்டு செய்வதால், அதிகமான மகிழ்ச்சி உண்டாகும். இப்படியாக உள்ளபோது, ஈச்வரன் தன்னுடைய ஸ்வதந்த்ரம் காரணமாகவும், ஸங்கல்பம் காரணமாகவும் அனைத்து பாகவதர்களுக்கும் எஜமானத் தன்மையை (சேஷித்வம்) உண்டாக்கிவிடுகிறான். மேலும் பாகவதர்களின் விருப்பம் மற்றும் தன்னுடைய ஸங்கல்பம் ஆகியவை மூலம் பாகவதர்களுக்கு சேஷத்வத்தையும் (தொண்டனாக உள்ள தன்மை) உண்டாக்குக்கிறான்.