Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 8)
அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்
பாகவத கைங்கர்யம் மூலம் எம்பெருமான் எவ்விதம் மகிழ்கிறான்
மூலம் – இவ்விடத்தில் தத்த்வவித்துக்குப் ப்ரமாண ஸரணியைப் பார்த்தால் யே யஜந்தி பித்ரூந் தேவாந் இத்யாதிகளிற்படியே ஈச்வரன் பாகவத சரீரனாய்க் கொண்டும் ஆராத்யனாம். ஸ ச மம ப்ரிய: என்கிறபடியே பரமைகாந்தி விஷயத்தில் ப்ரீதி பரதந்த்ரனான ப்ரகாரியினுடைய நினைவைப் பார்த்தால் ஜ்ஞாநீ த்வாத்மை மே மதம் என்கிறபடியே பாகவத கைங்கர்யத்தைப் பார்த்தால் பகவான் தன் அந்தர்யாமி பக்கலிலே பண்ணினதாக உகக்கும்.
– இங்கு நாம் பல ப்ரமாணங்களை ஆராய்ந்தால், பாகவதனைத் தனது சரீரமாகக் கொண்டுள்ள ஸர்வேச்வரனே ஆராதிக்கப்படுகிறான் என்பதை மஹாபாரதம் சாந்திபர்வம் (355-41) - யே யஜந்தி பித்ரூந் தேவாந் – பித்ருக்கள் முதலானவர்களை ஆராதிப்பவர்கள், அவர்களின் ஆத்மாவாக உள்ள ஸர்வேச்வரனையே ஆராதிக்கின்றனர் – போன்ற வரிகளின் மூலமாக அறியலாம். மேலும் கீதை (7-17) - ஸ ச மம ப்ரிய: - எனக்கு அவன் ப்ரியமானவன் – என்று கூறுவதற்கு ஏற்ப, ஈச்வரனின் எண்ணத்தை நோக்கும்போது, கீதை (7-18) - ஜ்ஞாநீ த்வாத்மை மே மதம் – அவர்களின் ஞானியானவன் எனது ஆத்மாவாகவே உள்ளான் – என்று கூறுவதற்கு ஏற்ப, பாகவதர்களுக்குச் செய்யப்படும் கைங்கர்யங்களைத் தன்னுடைய ஆத்மாவிற்குச் செய்யப்படும் கைங்கர்யங்களாகவே எம்பெருமான் எண்ணுகிறான். இதனால் மகிழ்கிறான்.