Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 7)
அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்
பாகவத கைங்கர்யமே முக்கியமானது
மூலம் – இவ்வர்த்தத்தில் ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் தஸ்மாத் பரதம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் மம மத்பக்தபக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் தஸ்மாத் மத்பக்தபக்தாச்ச பூஜநீயா விசேஷத: மத்பக்தஜந வாத்ஸல்யம் பூஜாயாம் சாநுமோதநம் மத்கதா ச்ரவணே பக்தி: ஸ்வர நேத்ராங்கவிக்ரியா ஸ்வயமாராதநே யத்நோ மமார்த்தே டம்பவர்ஜநம் மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி பக்திரஷ்டவிதா ஹி ஏஷா யஸ்மிந் ம்லேச்சே அபி வர்த்ததே ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதி: ஸ ச பண்டித: தஸ்மை தேயம் க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹி அஹம் அநந்யதேவதா பக்தா யே மத்பக்தஜந ப்ரியா: மாமேவ சரணம் ப்ராப்தாஸ்தே மத்பக்தா: ப்ரகீர்த்திதா: தஸ்ய யஜ்ஞவராஹஸ்ய விஷ்ணோரமிததேஜஸ: ப்ரணாமம் யே அபி குர்வந்தி தேஷாமபி நமோ நம: ததாச்ரயஸ்யாச்ரயணாத் தஸ்ய தஸ்ய ச தஸ்ய ச ஸம்ஸேவநாந்நர லோகே பூயந்தே ஸர்வபாதகை: இத்யாதி ப்ரமாணங்களை ஆராய்ந்தால் ராஜாவுக்கு ராஜகுமாரோபலாலநம் போலே பாகவத கைங்கர்யம் பகவானுக்கு அபிமதமாயிருக்கையால் சேஷபூதனான இவன் செய்யும் கிஞ்சித்காரங்களில் பாகவதகைங்கர்யம் ப்ரதாநமாயிற்று.
– பாகவத கைங்கர்யமே மேம்பட்டது என்பதைக் கீழே உள்ள பல வரிகளில் காணலாம்: பாத்மோத்தரம் (29-81) - ஆராதநாநாம் ஸர்வேஷாம் விஷ்ணோராராதநம் பரம் தஸ்மாத் பரதம் ப்ரோக்தம் ததீயாராதநம் பரம் – அனைத்து ஆராதனங்களிலும் விஷ்ணுவின் ஆராதனமே சிறந்தது; அதனைக் காட்டிலும் சிறந்தது பாகவத ஆராதனமாகும். மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வம் (116-23) - மம மத்பக்தபக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத் தஸ்மாத் மத்பக்தபக்தாச்ச பூஜநீயா விசேஷத: - எனது அடியார்கள் மீது பக்தியுள்ளவர்களிடம் எனக்கு அதிகமான ப்ரேமை உள்ளது. ஆகவே அவர்களை நன்கு ஆராதிக்க வேண்டும். கருட புராணம் (219-6, 7, 8, 9) - மத்பக்தஜந வாத்ஸல்யம் பூஜாயாம் சாநுமோதநம் மத்கதா ச்ரவணே பக்தி: ஸ்வர நேத்ராங்கவிக்ரியா ஸ்வயமாராதநே யத்நோ மமார்த்தே டம்பவர்ஜநம் மமாநுஸ்மரணம் நித்யம் யச்ச மாம் நோபஜீவதி பக்திரஷ்டவிதா ஹி ஏஷா யஸ்மிந் ம்லேச்சே அபி வர்த்ததே ஸ விப்ரேந்த்ரோ முநி: ஸ்ரீமாந் ஸ யதி: ஸ ச பண்டித: தஸ்மை தேயம் க்ராஹ்யம் ஸ ச பூஜ்யோ யதா ஹி அஹம் – என்னிடம் உள்ள பக்தி என்பது எட்டு வகைப்படும். அவையாவன – என் பக்தர்களிடம் உள்ள குறைகளைப் பொருட்படுத்தாமை; எனக்குச் செய்யும் பூஜையைக் கண்டு மகிழ்தல்; எனது சரிதங்களைக் கேட்பதில் ஆவல்; அவற்றைக் கேட்கும்போது குரல் தழுதழுத்து, மயிர்க்கூச்சல் எடுத்து, கண்ணீர் பெருகுதல்; தானும் ஆராதனை செய்தல்; எனது விஷயத்தில் ஆடம்பரம், டம்பம் இல்லாத தன்மை; எப்போது என்னை நினைத்தபடி இருத்தல்; என்னிடம் என்னைத் தவிர வேறு பலன் கேட்காமல் இருத்தல் – என்பதாகும். இவை யாரிடம் உள்ளனவோ அவன் மிலேச்சனாக இருந்தாலும் அவனை ஞானம் மற்றும் பக்தி கொண்ட அந்தணன் என்றும், ஸந்ந்யாஸி என்றும், பண்டிதன் என்றும் எண்ணப்படவேண்டும். அவனுக்கு ஞான உபதேசம் செய்யலாம். அவனிடமிருந்து ஞானத்தைப் பெறலாம். என்னைப் போன்றே அவன் பூஜிக்கப்பட வேண்டியவன். மஹாபாரதம் ஆச்வமேதிகபர்வம் (104-91) - அநந்யதேவதா பக்தா யே மத்பக்தஜந ப்ரியா: மாமேவ சரணம் ப்ராப்தாஸ்தே மத்பக்தா: ப்ரகீர்த்திதா: - மற்ற தேவதைகளிடம் பக்தி அற்றவர்களாய், பாகவதர்களிடம் அன்பு பூண்டவர்களாய், என்னையே சரணம் என்று அடைந்தவர்கள் எனது பக்தர்கள். மஹாபாரதம் சாந்திபர்வம் (46-126) - தஸ்ய யஜ்ஞவராஹஸ்ய விஷ்ணோரமிததேஜஸ: ப்ரணாமம் யே அபி குர்வந்தி தேஷாமபி நமோ நம: - எல்லையற்ற தேஜஸ் கொண்ட யஜ்ஞவராஹ வடிவம் கொண்ட விஷ்ணுவை ஆராதிப்பவர்களை நான் பலமுறை வணங்குகிறேன். கருடபுராணம் ஸ்ரீரங்கமஹாத்ம்யம் (8-91) - ததாச்ரயஸ்யாச்ரயணாத் தஸ்ய தஸ்ய ச தஸ்ய ச ஸம்ஸேவநாந்நர லோகே பூயந்தே ஸர்வபாதகை: - எம்பெருமானின் பக்தனை அண்டியிருப்பதாலும், அவனுக்குப் பக்தன், அவனுக்குப் பக்தன் என்ற தொடரின் இறுதியில் உள்ளவனுக்குக் கைங்கர்யம் செய்வதாலும் இந்த உலகில் உள்ளவர்கள் அனைத்து பாவங்களில் இருந்து விடுபடுகின்றனர். மேலே உள்ள பல வரிகள் மூலம் உணரப்படுவது என்ன? அரசனுக்கு அவனது ராஜகுமாரனை மகிழ்விப்பதால் எத்தனை மகிழ்ச்சி உண்டாகுமோ அது போன்று, பாகவத கைங்கர்யம் மூலம் எம்பெருமானுக்கு அதிகமான மகிழ்ச்சி உண்டாகிறது. ஆகவே எம்பெருமானின் சேஷனான ஜீவனுக்கு பாகவத கைங்கர்யம் மிகவும் அவசியம் என்று தெளிவாக அறியப்படுகிறது.