Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 6)

அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்

பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்வதன் காரணம்

மூலம் – ஆனபின்பு சேதநனான இவன் புத்திபூர்வகமாக ஒரு ப்ரவ்ருத்தி பண்ணும்போது தன் புருஷார்த்தமும் ஆநுஷங்கிதமாகவாகிலும் புகிரவேண்டியதால் அது வரும்போது ஈச்வராபிப்ராய விசேஷ மடியாக வரவேண்டுகையால் அதுக்காக ஈச்வராபிப்ராயத்தை ஆராய்ந்தவிடத்தில் பாகவதகைங்கர்யம் அவனுக்கு ஸர்வத்திலும் அபிமதமாயிருந்தது.

– ஆக ஜீவன் தனது புத்திக்கு ஏற்றபடி ஒரு செயலைச் செய்தாலும், அது ஜீவனுக்கு ஏற்ற புருஷார்த்தத்தை அளிப்பதாக இருந்தாலும், அந்தச் செயலானது எம்பெருமானின் எண்ணங்களுக்கு ஏற்றதாக இருத்தல் அவசியமாகிறது. ஆக ஈச்வரனின் அபிப்ராயங்களை ஆராய்ந்து பார்க்கும்போது பாகவதர்களுக்குச் செய்யும் கைங்கர்யமே ஜீவனுக்கு அனைத்திலும் உயர்வானது என்பது விளங்குகிறது.