Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 5)

அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்

பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்வதன் காரணம்

மூலம் – அப்படியே நித்யரும் முக்தரும் ஈச்வராபிப்ராயத்தை ஸாக்ஷாத்கரித்து பண்ணுகிற கைங்கர்யங்களாலே ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: என்கிறபடியே போக விசேஷத்தை உத்பாதித்து அம்முகத்தாலே அதிசயா தாயகராவார்கள். இப்ப்ரகாரம் சாஸ்த்ரமுகத்தாலே ஈச்வராபிப்ராயத்தை அறிந்து கைங்கர்யம் பண்ணுகிற க்ருதக்ருத்யனுக்கும் ஸமாநம். இவற்றில் சாஸ்த்ரவிருத்தங்களாலே ஈச்வரனுக்கு லீலா ரஸ மாத்ரத்தை உண்டாக்கும்போது தனக்கு அநர்த்த பர்யவஸிதமாயிருக்கும். பத்ததசையில் சாஸ்த்ரத்தாலும் முக்ததசையில் ப்ரத்யக்ஷத்தாலும் ஈச்வராபிப்ராயத்தைக் கண்டு ததநுரூபமாக வர்த்திக்கும்போது ஈச்வரனுடைய லீலாதிபுருஷார்த்தத்துடனே ஆநுஷங்கிதமாகத் தனக்கும் ஸ்வாபிமத புருஷார்த்தம் உண்டாம்.

– இதே போன்று நித்யரும், முக்தரும் எம்பெருமானின் எண்ணங்களை நேரில் அறிந்தவர்களாக அவனுடைய கைங்கர்யங்களில் ஈடுபடுவதால், ஸ்தோத்ரரத்னம் (46) - ப்ரஹர்ஷயிஷ்யாமி ஸநாதஜீவித: - எப்போதும் உனக்கே கைங்கர்யம் செய்தபடி, உனக்காகவே வாழ்ந்து உன்னை நான் மகிழும்படிச் செய்வேனோ – என்று கூறுவதற்கு ஏற்ப அவனுக்கு மகிழ்வை உண்டாக்கி, ப்ரயோஜனமாகிறார்கள். சாஸ்த்ரங்களை அனைத்தும் எம்பெருமானின் கட்டளைகள் என்பதால் அவைகளை மூலமாக அவனுடைய அபிப்ராயத்தை அறிகின்ற ப்ரபன்னர்களும் அவனுக்குக் கைங்கர்யங்கள் செய்து அவனுக்கு உபயோகமாக உள்ளனர். சாஸ்த்ரங்களுக்கு விரோதமாக நடக்கும்போது, எம்பெருமானுக்கு விளையாட்டை மட்டுமே அளித்து, தனக்குக் கெடுதலையே தேடிக் கொள்கிறான். முக்தனாக உள்ளபோது எம்பெருமானின் அபிப்ராயங்களை நேரில் அறிந்தும், இந்த உலகில் பந்தப்பட்டு உள்ளபோது எம்பெருமானின் அபிப்ராயங்களை சாஸ்த்ரங்கள் மூலமாக அறிந்தும் கைங்கர்யங்கள் செய்யும்போது – எம்பெருமானுக்கு விளையாட்டு முதலான மகிழ்ச்சியை உண்டாக்குவதுடன், தனக்கும் விருப்பமான புருஷார்த்தங்களை அடைகிறான்.