Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 2)

அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்

பாகவதர்களுக்குக் கைங்கர்யம் செய்வதன் காரணம்

மூலம் – இங்கு பகவத் கைங்கர்யத்தை பாகவத கைங்கர்ய பர்யந்தமாகச் சொல்லுகைக்கு அடி என் என்னில் – பரகத அதிசயாதாந இச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ: பர: சேஷீ என்று வேதார்த்தஸங்க்ரஹத்திலே அருளிச் செய்தபடியே ஸர்வேச்வரனைப் பற்ற சேஷபூதனான இவன் அதிசயாதாநம் பண்ணப் ப்ராப்தன். அவ்வதிசயந்தான் வஸ்து சக்தியை அநுரோதித்து வரவேணும். ஆனால் ஜீவனுக்குப் பரனைப் பற்ற சக்யமான அதிசயம் எது என்று பார்த்தவிடத்தில் சரீரத்வாதிமுகத்தாலே அதிசயாதாநம் பண்ணுகை இவனுக்கும் அசித்துக்கும் பொதுவாயிருந்தது. இவன் சேஷிக்கு விசேஷித்துப் பண்ணும் அதிசயம் சைதந்யமுகத்தாலேயாயிருக்கும்.

– பகவத் கைங்கர்யம் எவ்விதம் பாகவத கைங்கர்யம்வரை செல்லும் என்று கேள்வி எழலாம். இதற்கு விடை தரப்படுகிறது. வேதார்த்த ஸங்க்ரஹம் - பரகத அதிசயாதாந இச்சயா உபாதேயத்வமேவ யஸ்ய ஸ்வரூபம் ஸ சேஷ: பர: சேஷீ – மற்றவர்களுக்குப் புகழை ஏற்படுத்தவேண்டும் என்னும் விருப்பம் காரணமாக, அங்கீகரிக்கத் தக்கதாக இருத்தல் என்பதையே ஸ்வரூபமாக எந்த வஸ்து கொண்டுள்ளதோ அதுவே சேஷம், அந்தப் புகழை அடைபவன் சேஷீ – என்றது காண்க. ஆக ஸர்வேச்வரனுக்குப் புகழ் ஏற்படுத்தியபடி இருப்பவனாகிய ஜீவனே சேஷனாக உள்ளான். அத்தகைய புகழை உண்டாக்கும் ஜீவனின் ஸ்வரூபத்திற்கு ஏற்றபடி அந்தப் புகழ் இருக்கும். ஆனால் ஜீவனால் ஸர்வேச்வரனுக்கு என்ன புகழை அளிக்க இயலும் என்ற கேள்வி எழலாம். சரீரம் முதலானவற்றைக் கொண்டு ஒரு ஜீவன், அசித் வஸ்துவானது என்ன புகழை அளிக்க இயலுமோ அதனை மட்டுமே அளிக்க இயலும். ஆக இத்தகைய செயலானது இவனுக்கும் அசித்துக்கும் பொதுவானது ஆகும். தன்னுடைய சைதன்யம் அல்லது புத்தி மூலமாகச் சிறப்பான ஒரு புகழை உண்டாக்க இயலும்.