Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம் (பத்தி 1)

அர்த்தாநுசாஸந பாகம் – 16.புருஷார்த்தகாஷ்ட்ட அதிகாரம்

ஸ்வதந்த்ர ஸ்வாமித்வாத் ஸ்வபஹுமதிபாத்ரேஷு நியதம் ஸ்ரீய: காந்தோ தேவ: ஸ கலு விநியுங்க்தே சிதசிதௌ யதாலோகாம்நாயம் யதிபதிமுகைராஹிததியாம் ததோ ந: கைங்கர்யம் ததபிமத பர்யந்தம் அபவத்

– இந்த உலகில் எஜமானர்கள் தங்களது பணியாட்களைத் தங்களுக்கு மட்டும் அல்லாமல், தங்கள் உறவினர்களுக்கும் பணி செய்யக் கூறுவதைக் காணலாம். அடியார்களுக்குத் தேவதைகள் தொண்டு செய்வதை வேதங்களும் கூறுகின்றன. இதே போன்று, தனது மதிப்பைப் பெற்ற பாகவதர்களுக்குத் தொண்டு செய்யும்படியாக, சேதனம் மற்றும் அசேதனங்களை, அவற்றின் எஜமானனாக உள்ளதால் பெரியபிராட்டியின் நாயகன் விதிக்கிறான். ஆகவே யதிகளின் தலைவரான எம்பெருமானார் தொடக்கமாக உள்ள ஆசார்யர்கள் மூலமாக ஞானம் பெற்ற நமக்கு, பகவத் கைங்கர்யம் என்பது, அவனுக்குப் பிரியமான பாகவத கைங்கர்யம் வரை உள்ளது என்பதை அறியவேண்டும்.