Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 17)
அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்
ப்ரணயிநமிவ ப்ராப்தம் பச்சாத் ப்ரியா ஸ்வஸமந்திதம் மஹதி முஹுராம்ருஷ்டே த்ருஷ்ட்வா மநௌ மணிதர்ப்பணே ப்ரபதநதநா: ஸந்த: சுத்தை: ப்ரபும் பரிபுஞ்ஜதே ப்ரஸ்ருமர மஹாமோத ஸ்மேர ப்ரஸூநஸமை: க்ரமை:
– நன்றாக துடைக்கப்பட்டு தெளிவான ப்ரதிபலிப்பைக் காண்பிக்கும் கண்ணாடியின் முன்பாக வந்து நிற்கும் மனைவியானவள், தன் அருகில் வந்து நிற்கும் தனது கணவனின் பிம்பத்தைத் தன்னுடைய பிம்பத்துடன் சேர்த்துக் கண்ணாடியில் பார்க்கிறாள். இதனால் மகிழ்வு கொண்டு, நறுமணம் கூடிய மலர்களை எங்கும் தூவி மகிழ்வுடன் இருக்கிறாள். அந்த மனைவி போன்று, ப்ரபந்நர்கள் உள்ளனர். எப்படி? ஆசார்யனால் உபதேசிக்கப்பட்ட ஆழ்பொருள்களைக் கொண்டு நன்றாக துடைக்கப்பட்ட கண்ணாடி போன்று மேன்மை பொருந்திய திருஅஷ்டாக்ஷரத்தைக் கைக்கொள்கின்றனர். அதில், தங்களுடைய எஜமானனாகிய எம்பெருமானைத் தங்களுக்கு அருகாமையில் காண்கின்றனர். அப்போது மலர்ந்த மலர்கள் போன்ற கைங்கர்யங்களைச் செய்தபடி, மேலே கூறப்பட்ட மனைவி போன்று மகிழ்வுடன் உள்ளனர்.