Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 16)

அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்

விண்ணவர் வேண்டி விலக்கின்றி மேவும் அடிமை எல்லாம் மண்ணுலகத்தில் மகிழ்ந்து அடைகின்றனர், வண்துவரைக் கண்ணன் அடைக்கலம் கொள்ளக் கடன்கள் கழற்றிய, நம் பண்ணமரும் தமிழ் வேதம் அறிந்த பகவர்களே.

– அழகான த்வாரகை நகரத்தின் பதியாகிய க்ருஷ்ணனிடம் ப்ரபத்தி செய்து, அவனால் காக்கப்பட வேண்டியவர்களாக ஆனவர்களும், இதனால் தேவர்கள் முதலானோர்களுக்குப் பட்ட கடனைத் தீர்த்தவர்களும், இசையுடன் கூடியதான தமிழ் வேதமாகிய திவ்யபிரபந்தத்தை அறிந்தவர்களும் ஆகிய பாகவதர்கள் பெறுவது என்ன? எம்பெருமானிடன் நித்யஸூரிகள் ப்ரார்த்தனை செய்து, அதன் மூலம் தடையில்லாமல் ப்ரேமையுடன் செய்கின்ற கைங்கர்யங்களை, பாகவதர்கள் இந்த உலகத்திலேயே மகிழ்வுடன் செய்கின்றனர்.