Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 10)
அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்
சரியான வழியில் ஈட்டிய பொருள் மூலம் கைங்கர்யம் செய்தல்
மூலம் – அப்போது ததா ஹி யத்கார்யமுபைதி கிஞ்சித்துபாயநம் சோபஹ்ருதம் மஹார்ஹம் ஸ பாதுகாப்யாம் ப்ரதமம் நிவேத்ய சகார பச்சாத்பரதோ யதாவத் என்று திருவடிநிலைகள் விஷயத்தில் ஸ்ரீபரதாழ்வான் நடத்தின ராஜஸேவக வ்ருத்தியை ந்யாயார்ஜித த்ரவ்யங்களாலே நடத்தவும்,
– இராமாயணம் அயோத்யாகாண்டம் (115-27) - ததா ஹி யத்கார்யமுபைதி கிஞ்சித்துபாயநம் சோபஹ்ருதம் மஹார்ஹம் ஸ பாதுகாப்யாம் ப்ரதமம் நிவேத்ய சகார பச்சாத்பரதோ யதாவத் – இராமனின் பாதுகைகள் அயோத்தியை ஆண்டபோது அன்றாடம் செய்யவேண்டிய செயல்களையும், சிற்றரசர்களிடம் வந்த பொருள்களையும் பாதுகைகளிடம் தெரிவித்த பின்னரே, பரதன் ஆகவேண்டியவற்றைச் செய்தான் – என்பது காண்க. இதே போன்று ப்ரபந்நன் ஒருவன் ந்யாயமான வழியில் ஈட்டிய பொருள்கள் கொண்டு அரசனுக்குச் செய்யவேண்டிய பணிவிடை போன்று கைங்கர்யம் செய்தல் வேண்டும். கைங்கர்யத்தைத் தனது கடமை எனக் கொள்ளவேண்டும்