Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்

இந்த்ரியங்களை வசப்படுத்தி முறையான விஷயங்களில் பயன்படுத்துதல்

மூலம் – முடியானேயிற்படியே விடாய்த்த கரணங்களை ஸாத்விக ஆஹார ஸேவாதிகளாலே யோக்யங்களாக்கிப் ப்ராப்தங்களான அநுபவங்களிலே மூட்டி அயோக்யவிஷயாந்தரங்களின் பட்டிபுக்க வாஸநைகளை மாற்றுவிக்கவும்,

– திருவாய்மொழி (3-8-1) – முடியானே – என்பதில் கூறியபடி, தான் விரும்பியவாறு எம்பெருமானை அடைய இயலாத காரணத்தால் சோர்வு அடைந்த இந்த்ரியங்களை, எம்பெருமானை அனுபவிக்கத் தக்கதாக மாற்றவேண்டும். எப்படி என்றால் – தூய்மையான உணவு, அவனுக்கே தொண்டு செய்தல் முதலான செயல்கள் மூலம் ஆகும். பயிர்களை மேயவிடாமல் எவ்விதம் பசுக்கள் திருப்பிவிடப்படுகின்றனவோ அது போன்று, தவறான விஷயங்களில் இந்த்ரியங்கள் பாயாமல், திருப்பப்படவேண்டும்.