Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 5)

அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்

கார்ப்பண்யத்தை விடாமல் இருத்தல்

மூலம் – தனக்கு சரண்யப்ரஸாத விசேஷமூலமாக நம்மாழ்வார் நாதமுநிகளுள் ளிட்டார்க்குப் போலே ஸாக்ஷாத்காராதிகளாகிற பலோத்கமபர்வங்கள் வந்தாலும் “நன்மை தீமைகளொன்றுமறியேன்” என்றும், “அறிவனேலும் இவையெல்லாம் என்னால் அடைப்பு நீக்கொண்ணாது” என்றும் நிச்சயித்துப் பராதீந ஸ்வரூப ஸ்திதி ப்ரவ்ருத்தியான தன் அதிகாரத்திலே சொருகின ஆகிஞ்சந்யத்தை அழியமாறாதே அஹமஸ்ம்ய பராதாநாமாலப: ஆகிஞ்சநோ அகதி: இத்யாதிகளை அடியொற்றி நடக்கிற “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்”, “என்னான் செய்கேன்”, “களைவாய் துன்பங்களை யாதொழிலாய் களைகண் மற்றிலேன்”, “புகலொன்றில்லா அடியேன்”, “ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன்”, “கறவைகள் பின்சென்று”, “குளித்து மூன்றனலையோம்பும்”, ”குலங்களாய ஈரிரண்டில்”, “ஏழை ஏதலன்”, “பற்றேல் ஒன்றுமிலேன்”, “தருதுயரம் தடாயேல்” என்கிற பாட்டுக்களிலும், ந தர்மநிஷ்ட: அஸ்தி என்கிற ச்லோகத்திலும் இவர்கள் அருளிச்செய்த கார்ப்பண்யத்தின் சுவடுகளை எல்லாம் அவலம்பித்துக் கொண்டுபோரவும்.

– ஒருவனுக்கு ஸர்வேச்வரனின் கடாக்ஷம் காரணமாக, நம்மாழ்வார் மற்றும் நாதமுனிகள் ஆகியோருக்கு உண்டானது போன்று அவனது தரிசனம் முதலான பலன்கள் கிட்டக்கூடும். இப்படி உண்டானாலும் அவன் கர்வம் கொள்ளாமல், பெரியாழ்வார் திருமொழி (5-1-3) - நன்மை தீமைகளொன்றுமறியேன் – எனக்கு எது நன்மை எது தீமை என்று அறியமாட்டேன் – என்றும், பெரியதிருவந்தாதி (3) - அறிவனேலும் இவையெல்லாம் என்னால் அடைப்பு நீக்கொண்ணாது – நல்லது கெட்டதை நான் அறிய நேர்ந்தாலும் நல்லதை எடுத்துக் கொள்ளவோ தீயதை விலக்கவோ என்னால் இயலாது – என்றும் இருக்கவேண்டும். இப்படியாக ஸர்வேச்வரனை மட்டுமே சார்ந்துள்ளதான தனது ஸ்வரூபம், இருப்பு, செயல்பாடுகள் ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்துள்ள ஆகிஞ்சந்யம் (வேறு உபாயம் இல்லை என்னும் நிலை) மாறாதபடி அவன் இருத்தல் வேண்டும். அவன் அஹிர்புத்ந்யஸம்ஹிதை - அஹமஸ்ம்ய பராதாநாமாலப: ஆகிஞ்சநோ அகதி: - நான் அபராதங்களின் இருப்பிடம், என்னைக் காப்பாற்றிக்கொள்ள வேறு உபாயம் இல்லை, உன்னை அடையும் உபாயம் வேறு ஏதும் இல்லை – என்று கூறும்படியாக உள்ள நிலையில் இருத்தல் வேண்டும். மேலும் கீழே உள்ள பல வரிகளிலும் காணப்படும் கார்ப்பண்யத்தை (வேறு உபாயம் இல்லை என்று, கர்வம் நீங்கி, எம்பெருமானின் கருணை உண்டாகும்படி தாழ்ந்து நிற்றல்) கைவிடாமல் இருத்தல் வேண்டும். திருவாய்மொழி (5-7-1) - நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் – சிறந்த அநுஷ்டானம், ஞானம் அற்றவன் திருவாய்மொழி (5-8-3) - என்னான் செய்கேன் – நான் என்ன செய்யப்போகிறேன் திருவாய்மொழி (5-8-8) - களைவாய் துன்பங்களை யாதொழிலாய் களைகண் மற்றிலேன் – நீ எனது ஸம்ஸார துன்பங்களை நீக்கினாலும் நீக்காவிட்டாலும் உன்னைத் தவிர எனக்கு வேறு கதி இல்லை திருவாய்மொழி (6-10-10) - புகலொன்றில்லா அடியேன் – வேறு கதியில்லாத அடியேன் திருவாய்மொழி (10-10-3) - ஆவிக்கு ஓர் பற்றுக் கொம்பு நின்னலால் அறிகின்றிலேன் திருப்பாவை (28) - கறவைகள் பின்சென்று – பசுக்கள் பின்னே சென்று ஒன்றாக உண்போம் திருமாலை (25) - குளித்து மூன்றனலையோம்பும் – நீராடிய பின்னர் மூன்று அக்னிகளைக் காக்கவேண்டியதான அந்தணத் தன்மையை நான் அழித்துக்கொண்டேன் திருச்சந்தவிருத்தம் (90) - குலங்களாய ஈரிரண்டில் – தர்மங்களை செய்யக்கூடிய பிறவியில் பிறக்கவில்லை பெரியதிருமொழி (5-8-1) - ஏழை ஏதலன் – ஞானம் இல்லாதவன், நல்ல தொடர்பு அற்றவன் பெரியதிருமொழி (1-9-9) - பற்றேல் ஒன்றுமிலேன் – எந்தவிதமான ஆதாரமும் எனக்கு இல்லை பெருமாள் திருமொழி (5-1) - தருதுயரம் தடாயேல் – எனது துன்பங்களை நீ தடுக்காவிடில் ஆளவந்தாரின் ஸ்தோத்ரம் (22) - ந தர்மநிஷ்ட: அஸ்தி – நான் எந்தவிதமான தர்மங்களும் அற்றவன்