Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 4)

அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்

பரமைகாந்திகளைப் பின்பற்றுதல்

மூலம் – யஸ்யாநுபவ பர்யந்தா புத்திஸ்தத்த்வே ப்ரதிஷ்டிதா தத்த்ருஷ்டி கோசரா: ஸர்வே முச்யந்தே ஸர்வகில்பிஷை: என்கிறபடியே இவ்வர்த்தங்களில் நிஷ்டையுடையவர்களுடனே நெருங்கி வர்த்தித்து, அவர்கள் அநுஷ்டானங்களில், யாவாநர்த்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே என்கிற ப்ரகாரத்திலே தன் வர்ண ஆச்ரம ஜாதி குணாதிகளுக்கு அநுரூபமான கர்த்தவ்யாம்சத்தை நிஷ்கரித்து அநுஷ்ட்டித்து, இவ்வநுஷ்ட்டாநாதிகளையுடையோமென்னும் பாவநை யடியாக வரும் ஸ்வோத்கர்ஷ பரநிகர்ஷ அநுஸந்தாநங்களாகிற படுகுழிகளைத் தப்பும்படி தான் முன்னடி பார்த்து நடக்கவும்,

– ஸாத்வத ஸம்ஹிதை - யஸ்யாநுபவ பர்யந்தா புத்திஸ்தத்த்வே ப்ரதிஷ்டிதா தத்த்ருஷ்டி கோசரா: ஸர்வே முச்யந்தே ஸர்வகில்பிஷை: - பகவத் அனுபவத்தை எல்லையாகக் கொண்ட தத்வ ஞானத்தை உடைய ஒருவனது கடாக்ஷத்திற்கு இலக்காக உள்ளவர்கள், அனைத்து பாவங்களும் நீங்கப்பெறுவர் – என்றது காண்க. ஆகவே ப்ரபந்நன் ஒருவன், தத்வ ஞானம் உள்ளவர்களுடன் நெருக்கமாக வாழ்தல் வேண்டும். கீதை (2-46) - யாவாநர்த்த உதபாநே ஸர்வத: ஸம்ப்லுதோதகே – பலருக்கும் பயன்படும் ஏரியில் இருந்து அவரவர் தேவைக்கேற்ப எடுப்பது போன்று – என்ற ச்லோகத்தின்படி, தனது வர்ணாச்ரம தர்மங்களுக்கு எது தேவை என்பதை அறிந்து அதன்படி செயல்களைச் செய்தபடி இருத்தல் வேண்டும். மேலும் இந்தப் பாதையில் மிகவும் எச்சரிக்கையுடன் நடத்தல் வேண்டும். காரணம், தான் அனைத்தையும் கடைபிடிப்பதால் மிகவும் உயர்ந்தவன் என்றும், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் எண்ணம் உருவாகலாம். இதனால் படுகுழியில் விழக்கூடும்.