Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம் (பத்தி 1)
அர்த்தாநுசாஸந பாகம் – 15.உத்தரக்ருத்யாதிகாரம்
ஸந்தோஷார்த்தம் விம்ருசதி முஹு: ஸத்பி: அத்யாத்மவித்யாம் நித்யம் ப்ரூதே நிசமயதி ச ஸ்வாது ஸுவ்யாஹ்ருதாநி அங்கீகுர்வந் அனத லலிதாம் வ்ருத்திமாதேஹபாதாம் த்ருஷ்ட அத்ருஷ்ட ஸ்வ பர விகமே தத்தத்ருஷ்டி: ப்ரபந்ந:
– ப்ரபத்தியைக் கைக்கொண்ட ஒருவன், கண்ணால் காணக்கூடிய இந்த வாழ்க்கை மற்றும் காண இயலாத மோக்ஷ வாழ்க்கை ஆகிய இரண்டைப் பொறுத்தவரையில், தனது பொறுப்பு நீங்கியது என்பதில் மாறாத சிந்தனை கொண்டுள்ளான். அவன் தனது உடல் விழும்வரையில் செய்வது என்னவெனில் – எந்தவிதமான தோஷமும் இன்றி இனிமையாக உள்ள தனது வாழ்நாளை, தனது மனமகிழ்வுக்காக, சான்றோர்களுடன் கூடி நின்று, ஸ்ரீபாஷ்யத்தை எப்போதும் ஆராய்ந்தபடி உள்ளான். செவிகளுக்கு இன்பம் அளிப்பதான ஆழ்வார்களின் பாசுரங்களை எப்போதும் அனுஸந்தானம் செய்தபடி உள்ளான். இவற்றை மற்றவர்களுக்கும் கூறுகிறான்.