Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம் (பத்தி 8)
அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம்
ஸ்வாப உத்வோத வ்யதிகர போக மோக்ஷாந்தராலே காலம் கஞ்சித் ஜகாதி விதிநா கேநசித் ஸ்தாப்யமாநா: தத்வ உபாய ப்ரப்ருதி ஸ்வாமி ததாம் ஸ்வநிஷ்டாம் சேஷாம் க்ருத்வா சிரஸி க்ருதிந: சேஷமாயுர்நயந்தி
– இந்த உலக வாழ்க்கை, மரணத்திற்குப் பின்னர் கிட்டும் மோக்ஷம் ஆகியவற்றுக்கு இடையே உள்ள காலம் என்பது உறங்குதல், விழித்தல் ஆகியவற்றுக்கு இடையே உள்ள கனவு காலம் போன்றதே ஆகும். இந்த இடைவெளியில் ப்ரபந்நர்கள் ஏதோ ஒரு காரணத்தினால் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தங்கள் தலையில் தத்வம், உபாயம் மற்றும் புருஷார்த்தம் ஆகியவற்றில் தங்களுக்கு உள்ள நிஷ்டை என்பதை எம்பெருமான் தங்களது தலையில் கட்டிவிட்ட திருப்பரிவட்டம் என்றே எண்ணி, மீதம் உள்ள நாட்களை கழிக்கின்றனர்.