Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம் (பத்தி 7)

அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம்

முக்கிய மந்திரம் காட்டிய மூன்றின் நிலையுடையார் தக்கவையன்றித் தகாதவை ஒன்றும் தமக்கு இசையார் இக்கருமங்கள் எமக்கு உளவென்னும் இலக்கணத்தால் மிக்க உணர்த்தியர் மேதினி மேவிய விண்ணவரே.

– மூன்று மந்த்ரங்களில் முக்கியமான திருமந்த்ரம் உணர்த்துகின்ற ஸ்வரூபம், உபாயம், புருஷார்த்தம் ஆகிய மூன்றில் நிஷ்டையைக் கொண்டவர்கள் தங்களது நிஷ்டைக்கு ஏற்றதாக உள்ள கர்மங்களை தவிர, தங்களது ஸ்வரூபத்திற்கு ஏற்காததாக உள்ள மூன்றையும் நமக்குச் செய்யத்தக்கதாக உரைக்கமாட்டனர். இந்த நிஷ்டையின் அடையாளங்களைக் கொண்டு, அவை தம்மிடம் உள்ளன என்னும் ஞானம் உள்ளவர்கள், இந்த உலகத்தில் வாழ்கின்றபோதிலும் நித்யஸூரிகளே ஆவர்.