Srimad Rahasyatrayasaram - அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம் (பத்தி 4)
அர்த்தாநுசாஸந பாகம் – 14.ஸ்வநிஷ்ட்டாபிஜ்ஞாதிகாரம்
புருஷார்த்த நிஷ்டையின் அடையாளங்கள்
மூலம் – உத்பத்தி ஸ்திதி நாசாநாம் ஸ்திதௌ சிந்தா குதஸ்தவ யத் உத்பத்தி: யதா நாச: ஸ்திதிஸ்த த்வத்பவிஷ்யதி அசேஷ்டமாநமாஸீநம் ஸ்ரீ: கிஞ்சித் உபதிஷ்டதி கர்மீ கர்மாநுஸ்ருத்யாந்யோ ந ப்ராச்யமதிகச்சதி என்கிறபடியே ப்ராரப்த கர்ம விசேஷாதீனமாக ஈச்வரன் செய்யும் தேஹயாத்ராதிகளில் கரைதலற்று, தான் கரைந்தாலும் உத்பதந்நபி சாகாசம் விசந்நபி ரஸாதலம் அடந்நபி மஹீம் க்ருத்ஸ்நாம் நாதத்தமுபதிஷ்டதே யத் கிஞ்சித் த்வர்த்ததே லோகே ஸர்வம் தந்மத்விசேஷ்டிதம் அந்யோ ஹி அந்யச்சிந்தயதி ஸ்வச்சந்தம் விததாம்யஹம் என்கிறபடியே ஈச்வரன் நினைவின்படி அல்லது ஒன்றும் நடவாதென்று ப்ரதிஸந்தானம் பண்ணி அப்ரயத்நாகதா: ஸேவ்யா க்ருஹஸ்தைர்விஷயா: ஸதா ப்ரயத்நேநாபி கர்த்தவ்ய: ஸ்வதர்ம இதி மே மதி: நாஹாரம் சிந்தயேத் ப்ராஜ்ஞோ தர்மமேவாநுசிந்தயேத் ஆஹாரோ ஹி மநுஷ்யாணாம் ஜந்மநா ஸஹ ஜாயதே என்று பராசரகீதாதிகளிலும், ந ஸந்நிபதிதம் தர்ம்யம் உபபோகம் யத்ருச்சயா ப்ரத்யாசக்ஷே ந சாப்யேநம் அநுருந்தே ஸுதுர்லபம் என்று அஜகரோபாக்யாநத்திலும் சொல்லுகிறபடியே சாஸ்த்ரவிருத்தமல்லாத விஷயங்கள் தான் ஒரு விரகு செய்யாதிருக்க பகவத் ஸங்கல்பத்தாலே தாமே வரக்கண்டு ப்ராரப்தகர்மபலமான தனிசு தீருகிறதென்று விலக்காதே அநுபவிக்கையும்.
– கீழே உள்ள வரிகள் காண்க: உத்பத்தி ஸ்திதி நாசாநாம் ஸ்திதௌ சிந்தா குதஸ்தவ யத் உத்பத்தி: யதா நாச: ஸ்திதிஸ்த த்வத்பவிஷ்யதி – பிறத்தல், இருத்தல், இறத்தல் ஆகியவற்றுள் இருத்தலைப் பற்றி மட்டும் நான் ஏன் கவலை கொள்ளவேண்டும்? பிறத்தல், இறத்தல் போன்றே இருத்தலும் உண்டாகிறது. மஹாபாரதம் சாந்திபர்வம் (339-15) - அசேஷ்டமாநமாஸீநம் ஸ்ரீ: கிஞ்சித் உபதிஷ்டதி கர்மீ கர்மாநுஸ்ருத்யாந்யோ ந ப்ராச்யமதிகச்சதி – ஏதும் செய்யாமல் உள்ளவனிடம் செல்வமாகிய லக்ஷ்மீ தானாகவே வருகிறாள். ஆனால், தனது உடலைக் காப்பதற்காக பெரும் முயற்சி எடுக்கும் ஒருவன் உணவை ஈட்டவும் கடினப்படுகிறான். இது ஒருவனது பூர்வ கர்மங்களால் நடைபெறுகிறது. புருஷார்த்தத்தில் மட்டுமே தனது சிந்தனையை நிலைநிறுத்திய ஒருவன், தனது பூர்வ கர்ம பலன்களுக்கு ஏற்றபடி ஈச்வரனால் இயக்கப்படும் உடல் பேணுதல் குறித்து சிறிதும் கவலை கொள்ளமாட்டான். தான் எத்தனை கவலையோ வருத்தமோ கொண்டாலும், ஸர்வேச்வரனின் ஸங்கல்பத்தின்படியே அனைத்தும் நடக்கும் என்று எண்ணியபடியே இருப்பான். இதனைக் கீழே உள்ள வரிகளில் காண்க: உத்பதந்நபி சாகாசம் விசந்நபி ரஸாதலம் அடந்நபி மஹீம் க்ருத்ஸ்நாம் நாதத்தமுபதிஷ்டதே – ஆகாயத்தில் எம்பிக் குதித்தாலும், பாதாள லோகம் சென்றாலும், பூமி முழுவதும் சென்றாலும், ஒருவனுக்கு கொடுத்து வைக்காத ஏதும் கிட்டாது. மஹாபாரதம் சாந்திபர்வம் (359-56) - யத் கிஞ்சித் த்வர்த்ததே லோகே ஸர்வம் தந்மத்விசேஷ்டிதம் அந்யோ ஹி அந்யச்சிந்தயதி ஸ்வச்சந்தம் விததாம்யஹம் – உலகில் நடப்பவை அனைத்தும் எனது செயலே ஆகும். ஆகவே மற்றவர்களின் எண்ணத்தைத் தள்ளி, நான் எனது விருப்பப்படியே செய்கிறேன். மேலே உள்ள வரிகளை மனதில் நிறுத்தி, ஈச்வரனின் ஸங்கல்பத்தின்படியே அனைத்தும் நடைபெறும் என்றும், அவன் ஸங்கல்பம் இன்றி ஏதும் நடக்காது என்றும் எண்ணியபடியே இருக்க வேண்டும். பராசரகீதை போன்றவற்றில் கீழே உள்ள வரிகளைக் காணலாம்: மஹாபாரதம் சாந்திபர்வம் (301-35) - அப்ரயத்நாகதா: ஸேவ்யா க்ருஹஸ்தைர்விஷயா: ஸதா ப்ரயத்நேநாபி கர்த்தவ்ய: ஸ்வதர்ம இதி மே மதி: - தங்களது முயற்சி சிறிதும் இல்லாமல், தானாகவே வரும் எதனையும் க்ருஹஸ்தர்கள் ஏற்கவேண்டும். ஆனால் தங்களுக்கு விதிக்கப்பட்ட தர்மங்களை பெரும் முயற்சி எடுத்தாகிலும் செய்யவேண்டும் என்பது என் கருத்து. நாஹாரம் சிந்தயேத் ப்ராஜ்ஞோ தர்மமேவாநுசிந்தயேத் ஆஹாரோ ஹி மநுஷ்யாணாம் ஜந்மநா ஸஹ ஜாயதே – சிறந்த அறிவுள்ளவன் தனது உணவைக் குறித்துக் கவலைப்பட வேண்டாம். தர்மத்தைப் பற்றி எண்ணியபடி இருந்தால் போதுமானது. ஒருவனின் பிறப்பின்போதே அவனது உணவும் அவன் கூடவே வருகிறது. மஹாபாரதம் சாந்திபர்வம் (177-34) - ந ஸந்நிபதிதம் தர்ம்யம் உபபோகம் யத்ருச்சயா ப்ரத்யாசக்ஷே ந சாப்யேநம் அநுருந்தே ஸுதுர்லபம் – எனது முயற்சி இல்லாமல் தானாகவே என்னிடம் வருகிற, தர்மங்களுக்கு ஏற்ற, அனுபவிக்கத் தகுந்தவற்றை நான் மறுக்காமல் ஏற்பேன். கடினப்பட்டுத் தேடவேண்டிய போகங்களை நான் நாடமாட்டேன். சாஸ்த்ரங்களால் தள்ளப்படாத விஷயங்கள், தான் எந்தவிதமான முயற்சியும் எடுக்காதபோதிலும், ஈச்வரனின் ஸங்கல்பம் காரணமாகத் தாமாகவே தன்னிடம் வருவதை ஒருவன் காணக்கூடும். இவற்றைக் கண்டு, தனது பூர்வ கர்மங்கள் பலன் அளிக்கத் தொடங்கிவிட்டன என்று அறிந்து, இவை மூலம் தனது கடன்கள் கழிவதாகவே எண்ணி, அவற்றைத் தடுக்காமல் அனுபவிக்கிறான்.